" சனாதனம் குறித்து உதயநிதி பேசியதில் தவறில்லை” - அமைச்சர் செஞ்சி மஸ்தான்.

" சனாதனம் குறித்து உதயநிதி பேசியதில் தவறில்லை” -  அமைச்சர் செஞ்சி மஸ்தான்.

நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் முதலமைச்சர் கை காட்டுபவர் தான் பிரதமர்  என அமைச்சர் செஞ்சி மஸ்தான்  கூறியுள்ளார். 

சென்னை  விமான நிலையத்தில் புனித உம்ரா பயணத்தை முடித்து கொண்டு திரும்பிய அமைச்சர் செஞ்சி மஸ்தானுக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் வந்து இருந்த தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கினார். அப்போது செய்தியாளர்களிடம் அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறுகையில், பொது வாழ்வில் நேர்மையும் கடமை உணர்வும் கடின உழைப்பையும் நம்பி இருக்கிறவன். அந்த தன்னம்பிக்கையுடன் இறை அச்சத்துடன் மக்கள் பணி செய்வேன். 

துறை ரீதியாக கிடைத்த அனுபவத்தையும் வெளிநாட்டில் கிடைத்த அனுபவத்தையும் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று வெளிநாட்டில் பணிபுரிபவர்களுக்கு உதவுகின்ற வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். 

இந்தியாவிற்கு வழிகாட்டிய முதலமைச்சர் திகழ்கின்றார். இந்தியாவில் உள்ள நெருக்கடியை போக்க கூடிய தலைவராக மு.க.ஸ்டாலின் உள்ளார். நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் மு.க.ஸ்டாலின் யாரை கை காட்டுகிறாரோ அவர் தான் பிரதமராக வர முடியும். 

பகுத்தறிவு சிந்தனை, சுயமரியாதை, எல்லாரும் சமம். நாம் அனைவரும் மனித பிறவி என்ற உணர்வு இருக்க வேண்டும் என்பதற்காக உதயநிதி ஸ்டாலின் சொல்லி இருக்கிறார். தமிழ் இனத்தின் செல்லப்பிள்ளை. கலைஞரை ஒரு முறை தலையை சீவ தொகையை சொன்னார்கள். அந்த வழியில் உதயநிதி ஸ்டாலின் பதில் சொல்லி இருக்கிறார். உதயநிதி ஸ்டாலின் சொன்னதில் உள்ள உண்மையை கண்டு ஒரு கூட்டம் பதட்டமாக இருக்கிறது. எல்லா கால கட்டத்திலும் மக்களை அடிமைப்படுத்தி ஆள வேண்டும் என நினைக்கிற கூட்டம். மக்கள் தீர்ப்பே மகேஷன் தீர்ப்பு சொல்லுகிற கூட்டம் எங்கள் கூட்டம். மக்கள் நம்பிக்கையில் மக்களாக பயணிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படிக்க   | "பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் தலைவர்களை விட ஆங்கிலேயர்கள் யோக்கியர்கள்" ஆ.ராசா எம்.பி!!