“ஹாசிபாவை கொலை செய்தவர்களை கைது செய்த போதும் ’பாரத் மாதாக்கு ஜே’ , என்று தான் சொன்னார்கள்..! - சீமான்

“ஹாசிபாவை கொலை செய்தவர்களை கைது செய்த போதும்  ’பாரத் மாதாக்கு ஜே’ , என்று தான் சொன்னார்கள்..! - சீமான்

நம் நாட்டில் சேவை அரசியல் இல்லை நான்கு மாதங்களில் தேர்தல் வருவதால் கேஸ் விலையை குறைத்துள்ளதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டினார். 

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் புறவழிச்சாலையில் நாம்தமிழர் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. 

இதில் பங்கேற்று பேசிய சீமான் கூறியதாவது:- 

இங்கு கட்சி அரசியல் தேர்தல் அரசியல், விளம்பர அரசியல் தான் உள்ளது செயல் , சேவை அரசியல் கிடையாது

ஸ்டாலின் கூறுகிறார்  குழந்தைகள் பயன்பெற உப்புமா அதை நீங்கள்  சாப்பிட்டால் உங்கள் உடம்பு ஒப்புமா என பேசியதால் சிரிப்பலை உருவானது. மேலும்  சினிமாவில் புரொடியுசர் கம்பெனி என்னவென்றால் நாம் அது ஒரு உப்புமா  கம்பெனி என்று சொல்வது போல் திமுக ஒரு உப்புமா கம்பெனி என சொல்லலாம் என விமர்சித்தார்.
  
மேலும்   ‘பசு மாடு , பாகிஸ்தான் பக்கத்து நாடு , ஜெய்ஸ்ரீ ராம் கோஷம்’, கூடுதலாக  ‘பாரத மாதக்கு ஜே’- இது தான் பாஜக" - 

 8 வயது சிறுமி ஹாசிபாவை பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்தனர்,  அவரது தந்தை ‘எனது பிள்ளையை எல்லா இடத்திலும் தேடினேன்; ஆனால் கோவில் மட்டும் தேடவில்லை; அது புனிதமான இடம் அங்கு இதுபோன்ற இழிவான செயலை செய்வார்களா என்ற நம்பிக்கையில் அங்கு மட்டும்  தேடமால் விட்டுவிட்டேன்’, என பதிவிட்டார். அது மிகவும் வேதனைக்குரியது” எனக் குறிப்பிட்டார். 

மேலும்,  “ஹாசிபாவை கொலை செய்தவர்களை கைது செய்த போதும் அவர்கள் பாரத் மாதாக்கு ஜே”, என்று தான் சொன்னார்கள்; பாரத  மாதா மட்டும் உண்மையில் நேரில் நின்றால் பல பேர் சேர்ந்து கற்பழித்து கொன்று இருப்பார்கள்.  

என்மீது போடப்பட்ட வழக்கில் அதிக பட்சம் இறையான்மையிற்கு எதிராக பேசியதற்காக போடப்பட்ட வழக்கு தான்.  மக்களுக்காக போராடியதற்கு என்மீது 128 வழக்கு உள்ளது. 

நாங்கள் எம்.ஜி.ஆர் கருணாநிதி, ஜெயலலிதாவை பார்த்து அரசியலுக்கு வரவில்லை. பிரபாகரனை பார்த்து அரசியலுக்கு வந்தவர்கள் எனக் கூறினார். சீருடை அணியாத மக்கள் ராணுவம் நாம்தமிழர் கட்சியினர் என்றும் கூறினார்.  

“ஒரே நாடு ஒரே ரேஷன் போன்ற பலவற்றை ஒன்றாக கொண்டு வருகின்றனர் ஆனால் தண்ணீர் ஒரு சொட்டு கிடையாது.  அமைதியான முறையில் தண்ணீரை பெறுவார்களாம், இதெல்லாம் தேர்தல் அரசியல்”, என குறிப்பிட்டார். 

எல்லா குடும்ப தலைவிக்கும் ஆயிரம் ரூபாய் என்று அறிவித்து விட்டு, பின் தகுதி பார்த்து கொடுத்தார்கள். ‘நான்கு மாதங்களில் தேர்தல் வருவதால் கேஸ் விலை குறைவு’ எல்லாம் தேர்தல் அரசியல்.  மேலும் இஸ்லாமியர் சிறை கைதிகளை  விடுதலை செய்ய ஆளுநர் ரவி-க்கு கடிதம் அனுப்புகிறார்கள். அவர் அதில் கையொழுத்து போடமாட்டார் என தெரிந்தும், அதிலும் அரசியல் இஸ்லாமியர்களை ஏமாற்றுகிறார்கள் திமுக பழனி பாபாவிற்கு மரியாதை செய்யாது”, என பேசினார்.

மேலும் இறுதியாக பேசிய அவர்,  நாங்கள் ஒவ்வொரு முறை தேர்தலில் நின்று தோற்கின்றோம்; மீண்டும் போட்டியிடுகிறோம் எல்லாம் நம்பிக்கையில் தான்; இந்த முறையாவது வருகின்ற பாராளுமன்ற தேர்தலில்  நாம்தமிழர் கட்சியின் விவசாய சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்” என தெரிவித்தார்.

இதையும்  படிக்க   | "நாடாளுமன்ற தேர்தலி திமுக கூட்டணி வெற்றிபெற பாடுபட வேண்டும்" - அமைச்சர் செஞ்சி மஸ்தான்