வேதாரண்யம் தொகுதியில் பால்பண்ணை அமைக்கும் சாத்தியக்கூறு இல்லை.... அமைச்சர் நாசர்!!!

வேதாரண்யம் தொகுதியில் பால்பண்ணை அமைக்கும் சாத்தியக்கூறு இல்லை.... அமைச்சர் நாசர்!!!

வேதாரண்யம் தொகுதியில் விண்ணப்பிக்கும் பட்சத்தில் புதிய பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் ஆவடி நாசர் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் வினாக்கள் விடைகள் நேரத்தில், வேதாரண்யம் தொகுதியில் பால் பண்ணையும், தலைஞாயிறு பேரூராட்சியில் பால் குளிரூட்டும் நிலையமும் அமைக்க அரசு ஆவண செய்யுமா என சட்டமன்ற உறுப்பினர் ஓ.எஸ்.மணியன் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்து பேசிய பால்வளத்துறை அமைச்சர் நாசர், வேதாரண்யம் தொகுதியில் பால்பண்ணை அமைக்கும் சாத்தியக்கூறு இல்லை எனவும் புதிய பால் உற்பத்தி கூட்டுறவு சங்கம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.

மேலும், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய நான்கு மாவட்டங்களை கொண்டு தஞ்சாவூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் பால்பண்ணை செயல்பட்டு வருவதாகவும், மூன்று மாவட்டங்களை உள்ளடக்கி திருவாரூர் பால்பண்ணை அமைக்கப்பட்டுள்ளது என கூறிய அவர், வேதாரண்யம் பகுதியில் ஏற்கனவே 11 பால் உற்பத்தியாளர் சங்கம் மூலம் தினசரி 800 லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுவதாக கூறிய அவர், விண்ணப்பங்கள் அளிக்கும் பட்சத்தில் புதிய பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் நாசர் தெரிவித்தார்.

இதையும் படிக்க:  பக்ரைனில் சிக்கி தவித்த வீரபாண்டியை மீட்ட தமிழ்நாடு அரசு...!!