திமுக அரசு பொதுமக்களின் அடிப்படைப் பிரச்சனைகளில் அக்கறை செலுத்துவ தில்லை...செல்லூர் ராஜீ குற்றச்சாட்டு

திமுக அரசு பொதுமக்களின் அடிப்படைப் பிரச்சனைகளில் அக்கறை செலுத்துவதில்லை என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ குற்றம்சாட்டியுள்ளார்.

திமுக அரசு பொதுமக்களின் அடிப்படைப் பிரச்சனைகளில் அக்கறை செலுத்துவ தில்லை...செல்லூர் ராஜீ குற்றச்சாட்டு

மதுரை மாவட்டம் பரவை பேரூராட்சியில் மேற்குதொகுதி சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் கூட்டுறவு துறை அமைச்சருமான செல்லூர் ராஜூ புதிய நாடக மேடையை திறந்து வைத்தார். பின்னர் பொது மக்களின் வேண்டுகோளுக்கிணங்க அருகிலுள்ள ரேசன்கடையை ஆய்வு செய்தார். ஆனால் அவர் வரும் முன்னரே  ஊழியர் கடையை பூட்டிவிட்டு  ஓடியதாக கூறப்படுகிறது.

அப்போது அங்கிருந்த பொதுமக்கள் தங்களுக்கு ரேஷன் பொருட்கள் முறையாக வழங்குவதில்லை என்றும் பொருட்களை கடை ஊழியர் கடத்தி விற்பனை செய்வதாகவும் புகார் தெரிவித்தனர்.  அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் அவர் கூறுகையில்,

திமுக அரசு பொதுமக்களின் அடிப்படைப் பிரச்சனைகளில் அக்கறை செலுத்துவதில்லை என்றும்  முல்லைப் பெரியார் அணைநீரை வழக்கத்திற்கு மாறாக கேரளா அமைச்சர் திறந்து விட்டதால், தமிழ்நாடு விவசாயிகளின் உரிமையை திமுக அரசு பறிகொடுத்து விட்டது என்றார்.

மேலும் அரசு பேருந்துகளில் பெண்களுக்கு  இலவசம் என கூறிவிட்டு பேருந்துகளின் எண்ணிக்கையை திமுக அரசு குறைத்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், திமுக அரசு  அறிவித்த பல்வேறு திட்டங்களில் குளறுபடிகள் உள்ளது. அதனை  சரி செய்வதில் துறைஅமைச்சர்கள் அக்கரை காட்டுவதில்லை என தெரிவித்தார்.