ஊடகங்கள் மேற்கொண்ட பணி பாராட்டப்பட வேண்டியது....!!!

ஊடகங்கள் மேற்கொண்ட பணி பாராட்டப்பட வேண்டியது....!!!

அம்பாசமுத்திரம் காவல்நிலையத்தில், விசாரணைக்கு அழைத்துச் சென்றோரின் பற்களை பிடுங்கி வதைத்துள்ள கொடுமை குறித்து  ஐ.பி.எஸ் அதிகாரிகள் அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது கண்டிக்கத்தக்கது.

அறிக்கை:

அரசும், மனித உரிமை ஆணையமும் விசாரணை நடத்திவரும் சூழலில், நடந்திருக்கும் கொடுமையை கண்டித்து அந்த அறிக்கையில் ஒரு வார்த்தையும் இடம்பெறவில்லை.  மாறாக, குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அதிகாரி பல்பீர்சிங்கிற்கு ஆதரவாக நின்று ஊடகங்களில் வரும் செய்திகளை கட்டுப்படுத்த வேண்டுமென கோரியுள்ளனர்.

ஊடகங்கள் பணி:

ஏற்கனவே, துறை ரீதியாக அனுப்பப்பட்ட அறிக்கைகள் கூட மறைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படும்‌ நிலையில், ஊடகங்களின் செய்தியால்தான் இந்த கொடுமை வெளியுலகிற்கே தெரிந்தது எனவும் ஊடகங்கள் மேற்கொண்ட பணி பாராட்டப்பட வேண்டியதாகும் எனவும் தெரிவித்துள்ளார் சிபிஐ தலைவர் கே. பாலகிருஷ்ணன்.

கண்டிக்கத்தக்கது:

ஆனால் ஐ.பி. எஸ் அதிகாரிகள் அமைப்பு, ஊடகங்கள் மீது பாய்ந்துள்ளனர் எனவும் இது குற்றவாளிகளை பாதுகாக்கும் தவறான நோக்கம் கொண்ட அறிக்கை எனவும் கண்டிக்க வேண்டியது எனவும் சிபிஐ தலைவர் கே. பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

இதையும் படிக்க:  எலக்ட்ரிக் மோட்டாரில் கடத்தி வரப்பட்ட தங்கம்....!!