சின்னசுருளி அருவியில் ஆர்பரித்து விழும் நீர்...! சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி..!

தொடர் மழையால் சின்னசுருளி அருவியில் ஆர்பரித்து விழும் தண்ணீர்...! விடுமுறை நாள் என்பதால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு...!

சின்னசுருளி அருவியில் ஆர்பரித்து விழும் நீர்...! சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி..!

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி தாலுகா, கோம்பைத்தொழு அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் சின்னசுருளி அருவி அமைந்துள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் பகுதியில் உள்ள இந்த அருவிக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். 

கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக, மேகமலை வனப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக சின்னசுருளி அருவியில் தண்ணீர் ஆர்பரித்து கொட்டுகிறது. விடுமுறை நாளான இன்று காலை முதலே அருவிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து அருவியில் மகிழ்ச்சியுடன் குளித்து வருகின்றனர். அடர்ந்த வனப்பகுதிக்குள் அமைந்துள்ள சின்னசுருளி பகுதியில் குளிர்ச்சியான காலநிலை நிலவுவால் சுற்றலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.