மரம் முறிந்து விழுந்து பெண் காவலர் பலி... தலைமைச் செயலகத்தில் சோகம்...

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் தனிப்பிரிவின் அருகில், ராட்சத மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் பெண் காவலர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மரம் முறிந்து விழுந்து பெண் காவலர் பலி... தலைமைச் செயலகத்தில் சோகம்...

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில், சென்னையில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் தனி பிரிவின் அருகில் உள்ள பழமையான மரம் முறிந்து விழுந்தது.  அப்போது பாதுகாப்பு பணிக்கு வந்த, அரக்கோணத்தைச் சேர்ந்த போக்குவரத்து பெண் காவலர் கவிதா, தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு திரும்பியபோது, அவர் மீது மரம் மற்றும் அதன் கீழ் அமைக்கப்பட்டிருந்த கூடாரத்தின் இரும்பு கம்பிகள் விழுந்தன.

இதில், 35 வயதான பெண் காவலர் கவிதா உடல் நசுங்கி சம்பவம் இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 2 காலவலர்கள் காயமடைந்தனர். விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் மரங்களை இயந்திரம் மூலம் வெட்டி அகற்றி, பெண் காவலரின் சடலத்தை மீட்டனர். மேலும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த 10க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் நொறுங்கின. ஊடக வாகனங்கள் உள்ளிட்ட 4 கார்கள் நொறுங்கின. தலைமைச் செயலாளர் இறையன்பு சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டுள்ளார். டிஜிபி சைலேந்திரபாபுவும் அங்கு ஆய்வு மேற்கொண்டார்.

இதனிடையே, பெண் காவலரின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது குடும்பத்திற்கு பொது நிவாரண நிதியில் இருந்து 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.