தமிழகம் கேரளா இடையே நதிநீர் பங்கீடு தொடர்பாக மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியது...

தமிழகம் கேரளா இடையே நதிநீர் பங்கீடு தொடர்பாக மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது.

தமிழகம் கேரளா இடையே நதிநீர் பங்கீடு தொடர்பாக மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியது...

சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் நடைபெறும் ஆலோசனையில், பொதுப்பணித்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்ப பிரிவு தலைவர் சுப்பிரமணியன், கோவை, மதுரை மண்டல தலைமை பொறியாளர்கள் பங்கேற்றுள்ளனர்இந்த பேச்சுவார்த்தையில் ஆனைமலையாறு - நல்லாறு அணைத்திட்டம், பாண்டியாறு - புன்னம்புழா திட்டத்தில் நீர் பங்கீடு குறித்தும், கோவை மாநகரத்தின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் சிறுவாணி அணை பிரச்சனை குறித்தும் ஆலோசனை நடத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது..

முன்னதாக தமிழகம் கேரளா இடையிலான நதிநீர் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது குறித்து அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கேரளா சென்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, இரு மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த தமிழக பொதுப்பணித்துறை செயலாளர் தலைமையில் ஒரு குழுவும், கேரள அரசு சார்பில் அம்மாநில நீர்வள ஆதாரத்துறை செயலாளர் தலைமையில் ஒரு குழுவும் அமைக்கப்பட்டது.இந்த குழுவின் இரண்டு பேச்சுவார்த்தையில், பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்ட நிலையில் இன்று  மூன்றாம் கட்ட பேச்சு  நடந்து வருகிறது.