விமானங்கள் தரையிறங்க விதிக்கப்பட்ட தற்காலிக தடை வாபஸ்... 

சென்னையில் பெய்த கனமழை காரணமாக விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறங்க விதிக்கப்பட்ட தற்காலிக தடை விலக்கிக் கொள்ளப்பட்டது.

விமானங்கள் தரையிறங்க விதிக்கப்பட்ட தற்காலிக தடை வாபஸ்... 

சென்னையில் பெய்த கனமழை,காற்று காரணமாக சென்னை விமானநிலையத்தில் விமானங்கள் வந்து தரையிறங்குவதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் விமானங்கள் சென்னையில் தரையிறங்காமல் பெங்களூா்,ஹைதராபாத் விமான நிலையங்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டன.

இதையடுத்து சென்னை விமானநிலையத்தில் நேற்று பகல் 1.15 மணியிலிருந்து மாலை 6 மணி வரை விமானங்கள் வந்து தரையிறங்க இந்திய விமானநிலைய ஆணையம் தடைவிதித்தது. அதன்படி சென்னை விமானநிலையத்திற்கு மாலை 6 மணி வரை எந்த விமானமும் வந்து தரையிறங்கவில்லை.  

ஆனால் சென்னையில் இருந்து புறப்பட்டு செல்லும் விமானங்கள் வழக்கம்போல் இயங்கின. இந்நிலையில் மாலை 6 மணியுடன் தடையை இந்திய விமானநிலைய ஆணையம் விலக்கிக் கொண்டதையடுத்து, புனேவிலிருந்து முதல் விமானம் 65 பயணிகளுடன் புறப்பட்டு சென்னை உள்நாட்டு விமான நிலையம் வந்து சோ்ந்தது. இதையடுத்து டெல்லி, மும்பை, மதுரை, கோவை உள்ளிட்ட இடங்களிலிருந்து சென்னைக்கு உள்நாட்டு விமானங்கள் வந்து கொண்டிருக்கின்றன.