ஜாக்டோ ஜியோ முற்றுகை போராட்டத்தில்...ஆசிரியர்கள் கூட்டமைப்பு பங்கேற்காது...!

ஜாக்டோ ஜியோ முற்றுகை போராட்டத்தில்...ஆசிரியர்கள் கூட்டமைப்பு பங்கேற்காது...!

ஜாக்டோ ஜியோ தலைமைச் செயலக முற்றுகை போராட்டத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பு பங்கேற்காது என அக்கூட்டமைப்பின் தலைவர் அருணன் தெரிவித்துள்ளார். 

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி, வரும் 11 ஆம் தேதி தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்போவதாக ‘ஜாக்டோ ஜியோ’ அமைப்பு அறிவித்திருந்தது. 

இதையும் படிக்க : திமுக என்றாலே அது கருணாநிதியின் குடும்பகட்சி - ஈபிஎஸ் விமர்சனம்!

இந்நிலையில் ஜாக்டோ ஜியோ தலைமைச் செயலக முற்றுகை போராட்டத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பு பங்கேற்காது என அக்கூட்டமைப்பின் தலைவர் அருணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், பொது தேர்வு மற்றும் மாணவர்களுக்கான ஆண்டு தேர்வு நடைபெற்று வருவதால், மாணவர்கள் நலன் கருதி போராட்டத்தில் பங்கேற்க போவதில்லை என்று விளக்கமளித்துள்ளார்.

மேலும், அரசு ஊழியர்களை நிதியமைச்சர் தொடர்ந்து அவமதித்து வருவதற்கு முதலமைச்சர் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.