பரவி வரும் கொரோனாவால் பாதிப்பு குறைவு - மா.சு

பரவி வரும் கொரோனாவால் பாதிப்பு குறைவு - மா.சு

அரசு மருத்துவமனையின் சேவையைகளை பயன்படுத்திக் கொள்வதற்கு மக்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார்கள், கடந்த 3 ஆண்டுகளை விட தற்போது அது இரண்டரை மடங்கு உயர்ந்து உள்ளது. தற்போது பரவி வரும் கொரோனாவால் பாதிப்பு குறைவு இதனால் பெரிய பதற்றத்தை உருவாக்க வேண்டிய அவசியம் தற்போது கிடையாது என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை ராயபுரத்தில் உள்ள ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக ஆட்டிசம் மாதம் விழிப்புணர்வு நிகழ்ச்சி, எம்ஆர்எப் நிறுவனம் வழங்கும் மருத்துவ உபகரணங்களை பயன்பாட்டிற்கு கொண்டு வருதல் மற்றும் நோயாளிகள் குறைதீர்க்கும் மையத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்து மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கினார்...

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்.. 

 தமிழ்நாட்டில் அனைத்து மருத்துவ மனைகளிலும் குறை தீர்ப்பு முகாம் திறக்கப்பட்டு வருகிறது, அந்த வகையில் ஸ்டான்லி மருத்துவமனையில் இன்று குறை தீர்ப்பு முகாம் திறக்கப்பட்டுள்ளதாகவும் ரோட்டரி சங்கம் சார்பில் கடந்த ஆண்டு வரை  சைதாப்பேட்டை மாதாவரம் ஆகிய இடங்களில் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது என்று கூறிய அவர் 60 லட்சம் மதிப்பிலான மார்பக புற்றுநோய் கண்டறியும் ஊடுகதிர் பரிசோதனை கருவியை ரோட்டரி சங்கம் வழங்கியுள்ளதாகவும், ரூபாய் 38 லட்சம் மதிப்பிலான கண்புரை நீக்கும் இயந்திரம், கண் அறுவை சிகிச்சைக்கான நுண்ணோக்கி ஊடுளி இயந்திரம் உயர் வேதியல் பகுப்பாய்வு இயந்திரம் ஆகிய கருவிகளை இந்த மருத்துவமனைக்கு 25 லட்சம் செலவில் வழங்கி உள்ளதாகவும் கூறிய அவர் அருவை சிகிச்சை இயந்திரங்களை சுத்தம் செய்யும் அதிநவீன உபகரணங்கள் 58 லட்சம் செலவில் மருத்துவ சேவைகள் கழகம் வழங்கியுள்ளது என்றும் தெரிவித்தார்.....

மேலும் பேசிய அவர் 1.18 லட்சம் மதிப்பிலான அதிநவீன மருத்துவ உபகரணங்கள் இந்த மருத்துவமனைக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும் 2.18 மதிப்பிலான உபகரணங்கள் மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது எனவும் சென்னையில் உள்ள மருத்துவமனையை மேம்படுத்தும் வகையில் 106 அறிவிப்புகள் வெளியிடப்பட்டு, அதில் ஸ்டான்லி ராயபேட்டை, கே.எம்.சி, ராஜீவ்காந்தி ஆகிய மருத்துவமனைகளில் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், ஸ்டான்லியில் உள்ள செவிலியர் பயிற்சி பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு 35 கோடி செலவில் விடுதி கட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஸ்டான்லி மருத்துவமனைக்கு மட்டும் 147 கோடி ரூபாய் செலவிலான மருத்துவ கட்டடங்கள் கட்டப்படவுள்ளது என்றும் ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் 100 படுக்கையின் கூடிய தீவிர சிகிச்சை வார்டு 40 கோடி மதிப்பில்  அமைக்கப்பட உள்ளது என்றும் ராஜீவ் காந்தி பொது மருத்துவமனையில் நரம்பியல் துறைக்கு 65 கோடி செலவில் ஆன கட்டிடம் ஒன்று கட்டப்பட உள்ளது எனவும் கே.எம்.சி மருத்துவமனையில் புதிய டவர் பிளாக் 125 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்....

தொடர்ந்து பேசிய அவர் சென்னையில் அரசு மருத்துவமனையின் சேவையைகளை பயன்படுத்திக் கொள்வதற்கு மக்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருவதாகவும் கடந்த 2 ஆண்டுகளை விட தற்போது அது இரண்டரை மடங்கு உயர்ந்து உள்ளது என தெரிவித்தார்....


இராணுவ வீரர் ஒருவருக்கு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சி.டி.ஸ்கேன் எடுக்க லஞ்சம் வாங்ககப்பட்ட புகார்  குறித்து கேள்விக்கு...

அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலளிக்காமல் அருகில் இருந்த டி எம் இ சாந்தி மலர் பதில் அளித்தார் சிடி ஸ்கேன் செய்து கொள்ள வந்திருக்கிறார் அதற்கு சிறிது நேரம் காத்திருந்துதான் பண்ண வேண்டும் சிட்டி ஸ்கேனுக்கு 500 ரூபாய் கட்ட வேண்டும் இல்லையென்றால் இன்சூரன்ஸ் கார்டு இருந்தால் இலவசமாக செய்து கொள்ள முடியும் என்றும் அவர் தவறுதலாக கூறியுள்ளார் என்றும் கூறினார்....

இன்சூரன்ஸ் இல்லை என்று சொல்லி அறுவை சிகிச்சை பண்ணாமல் இருந்த ஒரு நோயாளி ஒருவர் நேரடியாக அமைச்சர் மா சுப்பிரமணியரனிடம் தனது கோரிக்கையை முன் வைத்ததின் பேரில் அவர் உங்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

மேலும் படிக்க | அண்ணன் மகனை வேலைக்கு போ கண்டித்த சித்தப்பாவை கல்லை போட்டு கொலை

மருத்துவமனைகளில் மட்டுமே முகக்கவசம் கட்டாயமாக உள்ளது மற்ற இடங்களில் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து கொண்டு சென்றால் நல்லது தற்போது பரவி வரும் கொரோனாவால் பாதிப்பு குறைவு இதனால் பெரிய பதற்றத்தை உருவாக்க வேண்டிய அவசியம் தற்போது கிடையாது என்று தெரிவித்தார்.அமைச்சர் பேட்டியை கொடுத்து சென்ற பிறகு நோயாளிகள் சிலர் தங்களது கோரிக்கையை முன்வைத்தனர் உங்களது கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்று வாக்குறுதி அளித்து சென்றார்