சிறுவர் பூங்காவில் நுழைந்த பாம்புகள்....

திருப்பத்தூர் மாவட்டம் அருகே உள்ள சிறுவர் பூங்காவில் நுழைந்த பாம்புகளை, தீயணைப்புத்துறையினர் பல மணி நேர போராட்டித்திற்கு பின் பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.

சிறுவர் பூங்காவில் நுழைந்த பாம்புகள்....

திருப்பத்தூர் மாவட்டம் அடுத்த பள்ளிப்பட்டு பகுதி அருகே அதிமுக ஆட்சியில் நிறுவப்பட்ட சிறுவர் பூங்கா, சுமார் ஐந்து ஆண்டு காலமாக கேட்பாரற்று முட்புதர்கள் நறைந்த பகுதியாகவும், பாம்புகள் நடமாட்டம் உள்ள பகுதிகாக காணப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

இது குறித்து பள்ளிப்பட்டு ஊராட்சி  தலைவராக பதவியேற்ற  சுப்பிரமணியிடம் தகவல் தெரிவித்தனர். அதனைதொடர்ந்து சிறுவர் பூங்கா சுத்தம் செய்யும் பணி தொடங்கப்பட்டது.

அப்போது அங்கிருந்த கல் இடுக்குகளில் இருந்த வெளியே வந்த நாகபாம்பு மற்றும் சாரை பாம்பை பார்த்த அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அந்த பாம்புகள் அருகில் இருந்த மரப்பொந்துக்குள் சென்று மறைந்து கொண்டன.

இது தொடர்பாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின்பேரில் வந்த தீயணைப்புத்துறையினர் பல மணி நேரப்போராட்டத்திற்கு பிறகு மரப்பொந்துகளில் மறைந்திருந்த பாம்புகளை லாவகமாக பிடித்தனர்.