வெயிலுக்கு இதமாக மழை..! மகிழ்ச்சியில் மக்கள்...!!

வெயிலுக்கு இதமாக மழை..! மகிழ்ச்சியில் மக்கள்...!!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், ராமநாதபுரம், கமுதி, பசும்பொன், கோட்டை  மேடு, அபிராமம், நாராயணபுரம், கல்லுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பொய்தது. கோடை காலத்தில் பெய்த மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

இதேபோன்று காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத், அய்யம்பேட்டை, வையாவூர், ஏனாத்தூர், செவிலிமேடு, ஓரிக்கை, உத்தரமேரூர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளுமை நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 

இதேபோன்று  ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார் சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்று, இடி, மின்னலுடன் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால், பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துடன் வாகனத்தை ஓட்டிச் சென்றனர். இருந்தும் வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 

இதேபோன்று, கோவை மாவட்டத்தில், லட்சுமி மில்ஸ், உக்கடம், பீளமேடு, ரயில் நிலையம், கணபதி உள்ளிட்ட பகுதிகளில் சாரல்  மழை பெய்து பெய்தது. அதே நேரம் புறநகர் பகுதிகளான போத்தனூர், தடாகம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. இதானல் வெப்பம் தணிந்து குளுமை நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.