105 ரூபாயை கடந்துள்ளது ஒரு லிட்டர் பெட்ரோல் விலை... டீசல் லிட்டருக்கு 33 காசுகள் அதிகரிப்பு...

சென்னையில் பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்த வண்ணம் உள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை இன்று மீண்டும் 30 காசுகள் வரை உயர்ந்து 106 ரூபாயை நெருங்கி உள்ளது.

105 ரூபாயை கடந்துள்ளது ஒரு லிட்டர் பெட்ரோல் விலை... டீசல் லிட்டருக்கு 33 காசுகள் அதிகரிப்பு...

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை தனியார் எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றன. அதன்படி சர்வதேச சந்தையில் கச்சா விலையேற்றத்தை காரணம் காட்டி எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை தொடர்ந்து உயர்த்திய வண்ணம் உள்ளன. விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருவது மக்களுக்கு வாழ்வாதார சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. 

பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு எதிரொலியாக மளிகை, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களின் விலை தொடர்ந்து கடுமையாக உயர்ந்த வருகிறது. சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 30 காசுகள் உயர்ந்து 105 ரூபாய் 43 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல் ஒரு லிட்டர் டீசல் விலை 33 காசுகள் அதிகரித்து 101 ரூபாய் 59 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது வாகன ஓட்டிகளை கலக்கமடைய செய்துள்ளது. மக்களின் சுமையை குறைக்க எந்தவித முயற்சியையும் எடுக்காமல் மத்திய அரசு கண்டு கொள்ளாமல் இருப்பது நாட்டு மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.