திருமணத்தில் மதுபோதையில் தள்ளாடிய புதுமாப்பிள்ளை: கல்யாணம் வேண்டாம் என வீடு திரும்பிய மணப்பெண்...

புது மாப்பிள்ளை குடிபோதையில் இருந்ததால் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்  சென்றதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருமணத்தில் மதுபோதையில் தள்ளாடிய புதுமாப்பிள்ளை: கல்யாணம் வேண்டாம் என வீடு திரும்பிய மணப்பெண்...

தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே தொட்ட படகாண்ட அள்ளி கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி சரவணன் என்பவருக்கும் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நேரு நகரை சேர்ந்த லட்சுமி என்ற பெண்ணிற்கும் கடந்த சில தினங்களுக்கு முன்பு இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நிச்சயக்கபட்டு கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே வஜ்ஜிரபள்ளம் என்ற கிராமத்திலுள்ள ஈஸ்வரன் கோவிலில் இன்று திருமணமும் நடைபெறவிருந்தது. பெண் தரப்பு உறவினர்கள் கோவிலில் சென்று பார்த்த போது சம்மந்தபட்ட மாப்பிள்ளை மற்றும் உறவினர்களையும் காணாதது கண்டு அதிர்ச்சயடைந்தனர். இதனையடுத்து மணமகன் சரவணன் வீட்டிற்கு சென்று பார்த்தபோது அங்கு மணமகனான சரவணன் மது போதை இருந்ததை கண்டு  அதிர்ச்சியடைந்தனர்.

அதனையடுத்து இந்த குடிகார மணமகனும் வேண்டாம், திருமணமும் வேண்டாம் என திருமணத்தை நிறுத்தியதோடு தாங்கள் திருமணத்திற்காக செய்த செலவுகளை மாப்பிள்ளை வீட்டார் தர வேண்டும் என்றும், பெண்ணின் உறவினர்கள் மாரண்டஅள்ளி காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.

அதனையடுத்து புகாரை பெற்றுக்கொண்ட காவல் துறையினர் மணமகன் சரவணனை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் போதை தெளிந்த மணமகன் சரவணன், இனிமேல் குடிக்க மாட்டேன் என்றும், தனக்கு நிச்சயக்கபட்ட பெண்ணை திருமணம் செய்து கொள்கிறேன் என காவல் நிலையத்திலேயே சத்தியம் செய்தும் மணமகள் லட்சுமி இந்த மாப்பிள்ளையும் வேண்டாம், திருமணமும் வேண்டாம் என பிடிவாதமாக மறுத்துவிட்டு தனது உறவினர்களுடன் தனது சொந்த ஊருக்கு சென்று விட்டார். இதனால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.