" ஆண்டிகள் கூடி மடம் கட்டியது போல் தான் எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டம் அமையும் " - ஓபிஎஸ்.

" ஆண்டிகள் கூடி மடம் கட்டியது போல் தான் எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டம்  அமையும் " - ஓபிஎஸ்.

சென்னை செல்வதற்காக தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இருந்து சாலை மார்க்கமாக மதுரை விமான நிலையத்திற்கு வருகை தந்த முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது: 

அதிமுக பொதுக்குழு வழக்கு தீர்ப்பு நிலுவையில் உள்ளது குறித்த கேள்விக்கு.?

நீதிமன்ற தீர்ப்பை தள்ளி வைத்திருக்கிறார்கள் தீர்ப்பு வந்தவுடன் தொடர் நடவடிக்கை தொடரும் என பதிலளித்தார்.

செந்தில் பாலாஜி சிகிச்சையில் இருப்பினும் அவர் மீது உள்ள வழக்கு குறித்த கேள்விக்கு.?

செந்தில் பாலாஜி குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்று சிரித்துக் கொண்டே கேள்வி எழுப்பினார்.

திரைத் துறையில் சமீப காலங்களில் ஜாதியை மையமாக வைத்து விவாதம் செய்வது குறித்த கேள்விக்கு.?

திரைப்படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை மாமன்னன் திரைப்படத்தை பார்த்துவிட்டு செய்தியாளர்களுக்கு பதில் அளிக்கிறேன் என்றார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் அண்ணாமலை செய்தியாளர்களை கடுமையாக விமர்சனம் செய்தது குறித்த கேள்விக்கு.?

"பொதுவாகவே செய்தியாளர்களுக்கு தனிப்பட்ட பிரத்யேகமான உரிமை இருக்கிறது நாட்டில் நடக்கின்ற பல்வேறு செய்திகள் மற்றும் பிரச்சினைகளை குறித்து மக்களுடைய கவனத்திற்கு கொண்டு வருவது. அவர்களுக்கு உரிமை இருக்கிறது. இது ஜனநாயக கடமை அதை மறுப்பவர்களுக்கு அவர்களது மனநிலையை பொறுத்து. 

கடந்த காலங்களில் பலமுறை எதிர்க்கட்சிகள் ஆட்சி அமைக்கின்ற உரிமையை நாடாளுமன்றத்தில் பெற்றும் அவர்களால் ஒழுங்காக வழிநடத்திச் செல்ல முடியாத சூழ்நிலையில் தான் கடந்த காலங்களில் நிகழ்ந்துள்ளது. இதுவும் அதேபோலத்தான் முடியும். ஆண்டிகள் கூடி மடம் கட்டியது போல் இந்த எதிர்க்கட்சிகளின் கூட்டமும் அமையும். " என்றார். 

இதையும் படிக்க    | " நிர்வாகத்தின் சுணக்கங்களை சரி செய்ய வேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளது" - தமிழிசை சௌந்தரராஜன்.