மார்க்கெட் திறக்க அனுமதி இல்லை!

சென்னை மாநகராட்சி அறிவிப்பின் படி இன்று முதல் கொத்தாஞ்சாவடி மார்க்கெட் தெருவில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டுள்ளது.

மார்க்கெட் திறக்க அனுமதி இல்லை!

சென்னை மாநகராட்சி அறிவிப்பின் படி இன்று முதல் கொத்தாஞ்சாவடி மார்க்கெட் தெருவில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் சென்னையில் மக்கள் அதிகம் கூடும் ஒன்பது இடங்கள் செயல்பட மாநகராட்சி தடை விதித்தது. அதன்படி நேற்று முதல் வருகிற 9 ஆம் தேதி வரை ரங்கநாதன் தெரு சந்திப்பு முதல் வடக்கு உஸ்மான் சாலை , மாம்பலம் ரயில் நிலையம் சந்திப்பு வரை இதனால் மக்கள் அதிகம் கூடும் இடங்கள் தடுப்புகள் அமைக்கப்பட்டு கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருக்கிறது. 

அதேபோல் தற்போது ஆடி மாதம் தொடங்கியுள்ள நிலையில், வீடுகளில் மற்றும் திருக்கோயில்களில் கூழ்வார்த்தல் செய்வார்கள் என்பதால் கருவாடு, காய்கறிகள், உள்ளிட்டவை மட்டும் நேற்று விற்பனைக்கு அனுமதிக்கபட்டது.திடீரென  கடைகள் திறக்க அனுமதி மறுதிருப்பது வேதனை அளிப்பதாகவும், சந்தையில் தினக்கூலி செய்பவர்களுக்கு அடுத்த 10 நாட்கள்  சம்பளம் இல்லாமல் குடும்பம்  சூழ்நிலை என்னாகும் என்றும் வேதனை  தெரிவித்தனர்.

கொத்தால் சாவடி மார்க்கெட்டின் 800 முதல் ஆயிரம் கடைகள் வரையிலும் ஒரே நேரத்தில் மூடப்பட்டுள்ளதால் அங்கு நாளொன்றிற்கு 2 ஆயிரம் முதல் 5000 வரையிலும் ஒரே நேரத்தில் பொதுமக்கள் கூடுவதை தவிர்க்கலாம் என்றும் இதனால் மூன்றாம் அலையை எதிர்கொள்ள இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை உதவியாக இருக்கும் என்றும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். தடையை மீறி பொதுமக்களும், சந்தை வியாபாரிகள் உள்ளே நுழைய கூடாது என்பதற்காக காவல்துறையினர் தொடர்ந்து சந்தையின் நுழைவுவாயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்...