இந்திய துணை கண்ட வரலாறு.... தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் தொடங்க வேண்டும் -மு.க.ஸ்டாலின்...!!

இந்திய துணை கண்ட வரலாறு.... தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் தொடங்க வேண்டும் -மு.க.ஸ்டாலின்...!!

இந்தியாவின் வரலாற்றை தமிழ் நிலப்பரப்பில் இருந்து தொடங்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தில் முன்னாள் ஆட்சிப்பணி அதிகாரி பாலகிருஷ்ணன் எழுதிய ஒரு பண்பாட்டின் பயணம் - சிந்து முதல் வைகை வரை என்ற நூல் வெளியீட்டு விழா நடந்தது. 

இதில் முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் பங்கேற்று நூலை வெளியிட்டாா். அதன் முதல் பிரதியை அமைச்சா் தங்கம் தென்னரசு பெற்றுக்கொண்டாா். தொடா்ந்து மேடையில் மு.க. ஸ்டாலின் பேசுகையில், 'கங்கைக் கரையில் அல்ல எங்களின் வைகை கரையில் இருந்து வரலாற்றை தொடங்க வேண்டும்' என்று சொன்ன  அண்ணாவின் கடைமையை தான் பாலகிருஷ்ணன் நிறைவேற்றிக் காட்டி இருக்கிறார் என குறிப்பிட்டாா். மேலும் பேசிய அவா் சிந்து பண்பாடு என்பது 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்றால்
அங்கு வாழ்ந்த மக்கள் யார்? அவர்கள் பேசிய மொழி என்ன என்ற கேள்விக்கான விடைகளை பாலகிருஷ்ணன் ஆய்ந்து தமிழ் இலக்கியத்தின் தொன்மையான பெயர் என்று தெரிவித்து இருக்கிறார் என்றாா்.

தொடா்ந்து பேசிய முதலமைச்சா், அங்கு வாழ்ந்த மக்கள் பயன்படுத்திய மொழி தமிழ் எனவும் அங்கு வாழ்ந்த மக்கள் சங்ககாலத் தமிழரின் மூதாதையர்கள் எனவும் நிறுவி இருப்பதாக குறிப்பிட்ட அவா் கொற்கை, வஞ்சி, தொண்டி ஆகிய தமிழ்ப் பெயர்கள் பாகிஸ்தானிலும், ஆப்கானிஸ்தானிலும் இருப்பதாகவும் தொிவித்தாா். 

கருப்பு, சிவப்பு வண்ணம் தான் கீழடியில் கிடைத்த பொருட்களிலும் காணப்படுகிறது. அதனால் தான் அதனை ஏற்பதற்கு சிலருக்கு மனம் வராமல் உள்ளதாக முதலமைச்சா் தொிவித்தாா். மேலும் பேசிய அவா், தமிழ்நாடு அரசின் சார்பில் சிவகங்கை மாவட்டத்தில் கீழடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள இடங்கள், தூத்துக்குடி, விருதுநகர், திருநெல்வேலி உள்ளிட்ட 7 இடங்களில் விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டிருப்பதாகவும், இந்திய துணை கண்ட வரலாறு தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் தொடங்க வேண்டும் எனவும் கூறினாா். 

இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், தங்கம் தென்னரசு, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, அரசு முதன்மை செயலாளர் உதயசந்திரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.