திராவிட மாடல் ஆட்சிக்கு பிறகு தான் உயர்கல்வித்துறை வளர்ந்துள்ளது - பொன்முடி!

திராவிட மாடல் ஆட்சிக்கு பிறகு தான் உயர்கல்வித்துறை வளர்ந்துள்ளது - பொன்முடி!

தமிழ்நாட்டில் திரா விட மாடல் ஆட்சிக்கு வந்த பின்பு தான் உயர்கல் வித்துறை வளர்ந்துள்ளது என அமைச்சர் பொன்முடி தெரி வித்துள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள தொழில்நுட்ப கல் வி இயக்கத்தில் 2023-24ஆம் கல் வி ஆண்டு பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான இணையதளத்தை உயர்கல் வித்துறை அமைச்சர் பொன்முடி திறந்து வைத்தார்.

இதையும் படிக்க : சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ”ரோல் மாடல்” உதயநிதி ஸ்டாலின் - அமைச்சர் சி. வி.கணேசன்!

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 2023-24 ஆம் கல் வியாண்டில் பொறியியல் மற்றும் கலை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான தேதிகளும், விதிமுறைகளும் இன்று அறி விக்கப்பட்டுள்ளதாகவும், அதன்படி, இன்று முதல் வருகின்ற ஜூன் மாதம் 4 ஆம் தேதி வரை இணையதளம் வாயிலாக விண்ணிப்பிக்கலாம் என்றும், அசல் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்வதற்கு ஜூன் மாதம் 9 ஆம் தேதி வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தெரி வித்தார்.   

தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டில் திரா விட மாடல் ஆட்சிக்கு வந்த பின்பு தான் உயர்கல் வித்துறை வளர்ந்துள்ளது எனவும், இந்தியா வில் ஒட்டு மொத்த உயர்கல் வி நிறுவனங்களுக்கான தரவரிசை பட்டியலில் முதல் 100 இடங்களில் 18 இடங்களை தமிழ்நாட்டை சேர்ந்த உயர்கல் வி நிறுவனங்கள் தான் பெற்றுள்ளதாக கூறினார்.