2026ஆம் ஆண்டு ஆட்சியில் அமர வேண்டும் என்பதே இலக்கு - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உறுதி

2026ஆம் ஆண்டு தமிழகத்தில் பாமக தலைமையில் ஆட்சியமைக்க வியூகங்கள் மற்றும் உத்திகளை வகுத்து வருவதாக அக்கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

2026ஆம் ஆண்டு ஆட்சியில் அமர வேண்டும் என்பதே இலக்கு - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உறுதி

பாமக தலைவராக பொறுப்பேற்ற அன்புமணி ராமதாஸ் தலைமையில், சென்னை தி.நகரில் உள்ள தனியார் ஓட்டலில் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், பாமக முன்னாள் தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் அமைச்சர் ஏ.கே. மூர்த்தி  உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி, இத்தனை ஆண்டுகள் பாமக பெரிய அளவில் வெற்றி பெறாததற்கு தொண்டர்கள் மட்டுமே காரணமில்லை தலைவர்களாகிய தாங்களும் காரணம் என கூறினார்.

வெற்றிக்காக தொடர்ந்து பாடுபடுவோம் என்றும், தங்களின் இலக்கு 2026ஆம் ஆண்டு ஆட்சியில் அமர வேண்டும் என்பது தான் என குறிப்பிட்டார். அதற்கான வியூகங்கள் மற்றும் உத்திகளை வகுத்து வருவதாகவும் அன்புமணி தெரிவித்தார். மேலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மது பிரச்சினை மற்றும் சமூக நீதி சார்ந்த பிரச்சனைகளை மையப்படுத்தியே பாமகவின் அணுகுமுறை இருக்கும் என கூறினார்.