" அடிப்படை வசதிகள் செய்துதரவில்லை,... எங்கள் ஆதார், ரேஷன் கார்டுகளை அரசிடமே ஒப்படைகிறோம்..! " - தர்மபுரி மக்கள் வேதனை.

" அடிப்படை  வசதிகள் செய்துதரவில்லை,... எங்கள் ஆதார், ரேஷன் கார்டுகளை அரசிடமே ஒப்படைகிறோம்..! " - தர்மபுரி மக்கள் வேதனை.

தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தை அடுத்த ஏரியூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சுஞ்சல்நத்தம் பஞ்சாயத்து மூல பெல்லூர் டேம் கொட்டாய் பகுதியில் சுமார் 50 ஆண்டு காலமாக 150 க்கு மேற்பட்ட மலை கிராம மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில்  பாமர மக்களுக்கு கிடைக்க கூடிய  அடிப்படை வசதிகளான தார் சாலை வசதி, குடிநீர்வசதி, மின்சாரம் வசதி போதிய  வசதிகள் எதுவும் கிடைக்காமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

மேலும் இந்த கிராமம் மலைகள் சூழ்ந்து காணப்படுவதால் விஷப்பூச்சிகள் அதிக அளவில் காணப்படுகின்றன.மேலும் கர்ப்பிணி பெண்கள் பிரசவத்திற்காகவும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உடல்நிலை சரியில்லை என்றாலும்  கயிறுகட்டில் மற்றும் புடவையில் தொட்டில் கட்டி தூக்கி செல்லும் அவல நிலையில் உள்ளனர். இதனால் உரிய நேரத்திற்குள் செல்லமுடியாமல் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழப்பு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள்  வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

மேலும் சரியான சாலை வசதி இல்லாததால் கரடு முரடான சாலையில் செல்வதால் பள்ளி செல்லும் பள்ளி மாணவ மாணவியர்  உரிய நேரத்தில் பள்ளிக்கு செல்ல முடியாததால் பாதியிலேயே பள்ளிக்கு செல்லாமல் நின்று விடுவதாக அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். இப்பகுதி மக்கள் தங்கள்  அன்றாட அத்தியாவசிய தேவைக்காக சொல்ல வேண்டிய நிலை இருப்பதால் மூன்று கிலோமீட்டர் தொலைதூரம்  நடந்தே செல்ல வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் ஒருசில பேர் டூவிலரில் சென்றாலும்  ரோடு சரியில்லாததால் விபத்து ஏற்பட்டு சிரமப்பட்டு வருகின்றனர்.மேலும் இங்கு உள்ள மக்கள் படிப்பறிவு இல்லாததால் தங்களுடைய தேவைகளுக்கு என்ன செய்வதென்று தெரியாமல் இத்தனை ஆண்டுகள் இருந்ததாகவும் எங்கள் குறைகளை தீர்க்க எந்த அதிகாரிகளும்  அரசியல்வாதிகளும் திரும்பிக்கூட பார்க்கவில்லை என்று குற்றம்சாட்டி வருகின்றனர்.

மேலும் மாவட்ட நிர்வாகம் எங்கள் கிராமத்திற்கு தேவையான வசதிகள் செய்து தரவில்லை என்றால் எங்களுக்கு வழங்கப்பட்ட ஆதார் அடையாள அட்டை மற்றும் ரேசன் கார்டு இவை இரண்டையும் அரசாங்கத்திடமே ஒப்படைத்துவிடுகின்றோம் என்று தெரிவிக்கின்றனர்.  

எனவே மாவட்ட நிர்வாகம் இந்த மலைக்கிராம மக்களின் கோரிக்கை களை நிறைவேற்றவேண்டும் என்பதே   அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இதையும் படிக்க      | 35 வருடங்களாக செயல்பபட்டு வந்த அரசு பள்ளி,.. மாணவர்கள் வராததால் மூடப்பட்டது...!