வனவிலங்குகளை வேட்டையாட வந்த 21 பேரை விரட்டி பிடித்த வனத்துறையினர்..!

பெரம்பலூர் அருகே வனப்பகுதியில் வெளியூரிலிருந்து வனவிலங்குகளை வேட்டையாட வந்த 21 பேரை வனத்துறையினர் விரட்டி பிடித்தனர்.

வனவிலங்குகளை வேட்டையாட வந்த 21 பேரை விரட்டி பிடித்த வனத்துறையினர்..!

பெரம்பலூர் அருகே வனப்பகுதியில் வெளியூரிலிருந்து வனவிலங்குகளை வேட்டையாட வந்த 21 பேரை வனத்துறையினர் விரட்டி பிடித்தனர். 

பெரம்பலூர் அருகே இன்று அதிகாலை 4 மணியளவில் பெரம்பலூர் வனச்சரக அலுவலர் பழனிக்குமரன் தலைமையிலான குழுவினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது திருச்சி, விராலிமலை , மணப்பாறை, புதுக்கோட்டை சுற்றுவட்டார பகுதியில் இருந்து 21 பேர் கொண்ட வேட்டையாடக்கூடிய குழு ஒன்று வேட்டை நாய்கள்,கருவிகளுடன் பெரம்பலூர் அருகே அள்ள சிறுவாச்சூர் வனப்பகுதி நோக்கி வந்துள்ளனர். அவர்கள், வனவிலங்குகளை வேட்டையாட வந்ததை அறிந்து, போலீசார் பிடிக்க முயன்ற போது தப்பித்தாக கூறப்படுகிறது. 

அவர்களை வனச்சரக அலுவலர் பழனிக்குமரன், வனவர் பிரதீப் குமார், வனக்காப்பாளர்கள்  அன்பரசு, ஜெஸ்டின் செல்வராஜ், ரோஜா மற்றும் செல்வகுமாரி மற்றும் வனக்காவலர்கள் வீரராகவன், அறிவுச்செல்வன் ஆகியோர் எசனை வனப்பகுதி வரை விரட்டி பிடித்து பெரம்பலூர் வனச்சரக அலுவலகத்திற்கு அழைத்து வந்து வனப்பாதுகாப்பு சட்ட அடிப்படையில் அவர்களுக்கு ரூ.60000 அபராதம் விதித்து வனவிலங்கு பாதுகாப்பு குறித்து எச்சரிக்கை விடுத்து அனுப்பி வைத்தனர்.