ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு அட்டவணை வெளியீடு.. விவரம் இதோ!!

ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு அட்டவணை வெளியீடு.. விவரம் இதோ!!

அரசுப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் காலியாக உள்ள 10 ஆயிரத்து 371 ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்.. இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பாணை செப்டம்பரில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான தேர்வு டிசம்பரில் நடைபெறும் எனவும் இதர பணியிடங்களுக்கு அரசாணை வெளியிடப்பட்ட உடன் அறிவிப்பாணை வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் 2020 மற்றும் 2021ம் ஆண்டுகளுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியானது. இந்நிலையில், ஆகஸ்ட் 25ம் தேதி முதல் 31ம் தேதி வரையுள்ள தேதிகளில், தாள் ஒன்றுக்கு மட்டும் முதற்கட்டமாக தேர்வு நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. தேர்வு கால அட்டவணை, அனுமதிச்சீட்டு வழங்கும் விவரம் ஆகஸ்ட் 2ம் வாரம் அறிவிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.