பெயர் சூட்டப்பட்ட நாள் பிறந்த நாள் அல்ல... முதல்வரின் அறிவிப்பை ஏற்க மறுத்த ராமதாஸ்...

நவம்பர் 1-ம் தேதி தான் தமிழ்நாடு தினம். பெயர் சூட்டப்பட்ட நாள் பிறந்த நாள் அல்ல என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

பெயர் சூட்டப்பட்ட நாள் பிறந்த நாள் அல்ல... முதல்வரின் அறிவிப்பை ஏற்க மறுத்த ராமதாஸ்...

பெயர் சூட்டப்பட்ட நாள் பிறந்த நாள் அல்ல என்றும், நவம்பர் 1-ம் தேதி தான் தமிழ்நாடு தினம் எனவும், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.  

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 1967-ம் ஆண்டு சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என பெயர் சூட்டக் கோரும் தீர்மானம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட நாளான ஜூலை 18-ந் தேதி தான் தமிழ்நாடு தினமாக கொண்டாடப்படும் என முதலமைச்சர் கூறியிருப்பதை ஏற்க முடியாது என கூறியுள்ளார்.

ஒரு மாநிலம் பிறந்த நாளைத் தான் அம்மாநில தினமாக கொண்டாட முடியும் என்றும், பெயர் சூட்டப்பட்ட நாளையோ, ஒரு குறிப்பிட்ட பெயரை சூட்டலாம் என்று கோரிக்கை வைக்கப்பட்ட நாளையோ பிறந்த நாளாக கொண்டாட முடியாது எனவும் குறிப்பிட்டுள்ள ராமதாஸ், இன்றைய தமிழ்நாடு நிலப்பரப்பு உருவாக்கப்பட்ட நவம்பர் 1-ம் தேதியே தொடர்ந்து தமிழ்நாடு தினமாக கொண்டாடப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.