மத்திய அரசுக்கு எதிராக போராடுபவர்கள் மீது வழக்குகள்... திரும்ப பெற நல்லகண்ணு வலியுறுத்தல்...

மத்திய அரசுக்கு எதிராக போராடுபவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என்று நல்லகண்ணு கோரிக்கை வைத்துள்ளார்.

மத்திய அரசுக்கு எதிராக போராடுபவர்கள் மீது வழக்குகள்... திரும்ப பெற நல்லகண்ணு வலியுறுத்தல்...

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் தலைவரும் விடுதலைப் போராட்ட வீரருமான பி. சீனிவாசராவின் 60 வது நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை தி. நகரில் உள்ள பாலன் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவ படத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு உள்ளிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நல்லகண்ணு கூறியதாவது, 

சீனிவாச ராவ் 1961 ஆம் ஆண்டு நில சீர்திருத்த சட்டத்திற்காகவும் விவசாயிகளின் உரிமைக்காகவும் போராடியவர். சீரனிவசராவ் போராட்டம் நில சீர்திருத்தம் மட்டுமல்லாமல் விவசாயிகளின் பல்வேறு போராட்டங்களை தலைமை தாங்கி நடத்தியவர் என புகழாரம் சூட்டினார்.

விவசாயிகளை கார்ப்பரேட் கையில் கொடுக்க மூன்று சட்டத்திருதங்களை மத்திய மோடி அரசு கொண்டுவந்துள்ளது. விவசாயிகள் விலை நிர்ணயம் செய்யும் உரிமையை பறித்து கார்ப்பரேட் கையில் கொடுத்து உள்ளனர்.

சட்டமன்றத்திலும் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.
மக்களின் போராட்டங்களை புறக்கணித்து  உள்ளது மத்திய அரசு விவசாயத்துக்கு விரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட மூன்று வேளாண் சட்ட திருத்தங்களை திரும்ப பெற வேண்டும் என்றார். 

கர்நாடகத்தில் கட்டாய மதமாற்ற தடை சட்டம் கொண்டுவர பட உள்ளது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், மதசார்பற்ற அரசியல் கொள்கை என்பது அரசியலமைப்பு சட்டத்தில் உள்ளது அதை மறுக்கும் வகையில் மதத்தை அடிப்படையாக கொண்டு, ஆட்சி நடத்தி வருகிறார்கள். மதத்தின் அடிப்படையில் தான் காந்தி கொல்லப்பட்டார்.

மத்திய  அரசுக்கு எதிராக போராடுபவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என்ற அவர், மத்திய மோடி அரசை அகற்ற அனைத்து கட்சிகளும் ஒத்த கருத்துடன் உள்ளனர் என்றார்.