60 அடி ஆழம் உள்ள கிணற்றில் விழுந்த கார்... தந்தை, மகள் சடலமாக மீட்பு...

60 அடி ஆழம் உள்ள கிணற்றில் நிலை தடுமாறி கார் விழுந்த விபத்தில் 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தந்தை, மகள் சடலமாக மீட்கப்பட்டனர்.

60 அடி ஆழம் உள்ள கிணற்றில் விழுந்த கார்... தந்தை, மகள் சடலமாக மீட்பு...

தருமபுரி அருகே பெங்களூரை சேர்ந்த பொறியாளர் சேலம் மாவட்டம் மேட்டூரில் இருந்து பெங்களூருக்கு தருமபுரி வழியாக காரில் சென்று கொண்டிருந்தபோது தருமபுரி அருகே பொன்னேரி என்ற இடத்தில் மழையின் காரணமாக கார் கண்ணாடியில் மழை நீர் பட்டதால் சாலை சரியாக தெரியாத காரணத்தால்  சாலையோரம் இருந்த 60 அடி ஆழம் உள்ள விவசாய கிணற்றில் திடீரென கார் கவிழ்ந்து விழுந்து தண்ணீரில் மூழ்கியது.

சீட் பெல்ட் அணியாமல் இருந்த வீராவின் மனைவி உமா(35) மட்டும் கிணற்றிலிருந்து வெளியே வந்து உயிருடன் தப்பியுள்ளார். காரை ஓட்டிச்சென்ற வீரனும்(43) அவரது குழந்தை சுஷ்மிதாவும்(13) தண்ணீரில் மூழ்கி விட்டனர்.

ஐந்து மணி நேரமாக தண்ணீரில் மூழ்கிய காரையும் இருவரையும் தேடும் பணியில் தீயணைப்பு துறையினரும் காவல்துறையினரும் ஊர்க்காவல் படையினரும் தந்தை, மகள் இருவரையும் சடலமாக மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  காரிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.