புதை மின் வடங்களுக்கு ரூ.6.57 கோடி நிதி ஒதுக்கீடு - செந்தில் பாலாஜி பதில்!

புதை மின் வடங்களுக்கு ரூ.6.57 கோடி நிதி ஒதுக்கீடு - செந்தில் பாலாஜி பதில்!

திருவாரூர் தேரோடும் வீதிகளில் மின் கம்பிகளை புதை மின் வடங்களாக மாற்றி அமைக்க 6 கோடியே 57 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார். 

தமிழ்நாடு சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது, திருவாரூர் நகரில் தேரோடும் வீதிகளில் மேல் செல்லும் மின் கம்பிகளை புதைமின் வடங்களாக மாற்றி அமைக்க அரசு முன்வருமா என திருவாரூர், சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் கேள்வி எழுப்பினார். 

இதையும் படிக்க : ஆன்லைன் சூதாட்ட தடை - அரசிதழில் தண்டனை விவரங்கள் வெளியீடு!

இதற்கு பதிலளித்து பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, திருவாரூர் தேரோடும் வீதிகளில் மின் கம்பிகளை புதை மின் வடங்களாக மாற்றி அமைக்க 6 கோடியே 57 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டள்ளதாகவும், விரைவில் பணிகளை முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் கூறினார்.