மின் கட்டண உயர்வு.. பொதுமக்கள் கருத்து தெரிவிக்க 30 நாட்கள் கால அவகாசம்!!

மின் கட்டண உயர்வு குறித்த கருத்துக்களை தெரிவிக்க 30 நாட்கள் காலஅவகாசம் வழங்கி தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மின் கட்டண உயர்வு.. பொதுமக்கள் கருத்து தெரிவிக்க 30 நாட்கள் கால அவகாசம்!!

மின்சாரக் கட்டணங்கள் உயர்வு:

மத்திய அரசின் அழுத்தம் காரணமாக தமிழ்நாட்டில் மின்சாரக் கட்டணங்கள் உயர்த்தப்பட உள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி நேற்று அறிவித்திருந்தார்.  ஏழை மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில்தான் கட்டணம் உயர்த்தப்படுவதாகவும், ஒழுங்குமுறை ஆணையத்தின் பரிந்துரைக்குப் பின்னர் கட்டண உயர்வு அமலுக்கு வரும் என்று கூறியிருந்தார்.

30 நாட்கள் கால அவகாசம்:

மின் கட்டண உயர்வு குறித்து மக்கள் கருத்துத் தெரிவிக்க 30 நாட்கள் கால அவகாசம் வழங்கி தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

பொதுமக்கள் கருத்து: 

இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள  பொதுமக்கள், மின் கட்டண உயர்வை தமிழக அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் அல்லது மற்ற அத்தியாவசிய பொருட்கள் விலையை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். அரசின் அறிவிப்பு சாமானியர்களை கவலையில் ஆழ்த்தியிருப்பதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.