என்எல்சி நிர்வாகம் சட்டத்துக்கு விரோதமாக செயல்படுகிறது - மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர்

நெய்வேலி சிஐடியூ தொழில் சங்கத்திற்கு வருகை தந்த மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் பத்திரிக்கையாளர் சந்திப்பில், என்எல்சி நிர்வாகம் சட்டத்திற்கு விரோதமாக நடந்துகொள்வதாகக் கூறியுள்ளார்.

என்எல்சி நிர்வாகம் சட்டத்துக்கு விரோதமாக செயல்படுகிறது -  மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர்

நெய்வேலி சிஐடியூ தொழில் சங்கத்திற்கு வருகை தந்த மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்எல்சி நிறுவனத்தில் பயிற்சி பொறியாளருக்கான தேர்வு நடத்தி, அதில் 299 பேர் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ ஆய்வு ஆகியவற்றிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் அதில் தேர்வான 299 பேரில், ஒருவர் கூட தமிழ்நாட்டைச்  சார்ந்தவர்கள் இல்லை என்பது தான் சந்தேகமளிக்கிறது.  ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற தேர்வுகளில் தமிழக இளைஞர்கள் தேர்வு பெற்று வரும் போது, இந்த என்எல்சி இந்தியா நிறுவனம் நடத்திய தேர்வில் ஒருவர் கூட தேர்வு ஆகாதது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. 

என்எல்சி நிர்வாகம் மோசடியாக செயல்படுகிறது என அச்சத்தை ஏற்படுத்துகிறது. என்எல்சி நிர்வாகம் திட்டமிட்டு வட இந்தியர்களை கொண்டு வர மேற்கொள்ளும் நடவடிக்கையாகவே இது கருதப்படுகிறது. ஏற்கனவே என்எல்சி நிர்வாகத்திற்கு பொறியாளர்கள், உயர் அதிகாரிகள் என வட இந்தியர்கள் கொல்லை புறம் வழியாக நியமனம் செய்யப்பட்டிருக்கும் நிலையில், இந்த 299 பொறியாளர்கள் நியமனம் குறித்து சிஐடியூ வழக்கு தொடுத்து, அந்த வழக்கானது நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில் என்எல்சி நிர்வாகம் நாளை அந்த 299 பயிற்சி பொறியாளர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ ஆய்விற்கு வர சொல்லி இருப்பது சட்டத்துக்கு விரோதமானது. உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள  நிலையில், நிர்வாகம் எப்படி இதுபோன்று  நடந்து கொள்ளலாம்.  

அதிலும் தற்போதுள்ள என்எல்சி நிறுவன சேர்மன், இந்த பொறியாளர்களை நியமனம் செய்வதில் விடாப்பிடியாக செயல்படுகிறார். ஏற்கனவே என்எல்சி நிறுவனத்திற்கு நிலம் கொடுத்து, வாழ்வாதாரத்தை இழந்த ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்பத்தினருக்கு வேலை கேட்டால், அதைப் பற்றி எதுவும் சொல்லாமல், இந்த 299 பேருக்கு பயிற்சி பணி ஆணை கால தேர்வு என்பது முறைகேடானது. இதை மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்த்து வழக்கு தொடர உள்ளது என கூறியுள்ளார்.