ஏப்.6-ம் தேதி புதிய கல்விக் கொள்கை குறித்து சட்டப்பேரவையில் விவாதம் - அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி

வரும் ஏப்ரல் 6-ம் தேதி தொடங்கும் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் புதிய கல்விக் கொள்கை குறித்து விவாதிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

ஏப்.6-ம் தேதி புதிய கல்விக் கொள்கை குறித்து சட்டப்பேரவையில் விவாதம் - அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி

நேரடி நியமன வட்டாரக்கல்வி அலுவலர்களுக்கு நிர்வாகத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி  தொடக்க விழா மதுரையை அடுத்த நாகமலை புதுக்கோட்டையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பின்னர்  செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, பழுதடைந்த பள்ளி கட்டிடங்களை சீர்படுத்தி மேம்படுத்த முதல் கட்டமாக ஆயிரத்து 300 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்றார்.  

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நல்ல தொடுகை மற்றும் தவறான எண்ணத்துடன் தொடுதல் குறித்து விளக்கப்படும் என்றார். மாணவர்கள் குறித்த நேரத்தில் புறப்படாமல், ஸ்டைல் என நினைத்து கூட்ட நேரங்களில் படிக்கட்டுகளில் தொங்கிக் கொண்டு செல்வதாக கூறிய அமைச்சர் மகேஷ், பேருந்தை நிறுத்தி உடனடியாக அவர்களை இறக்கி விடுமாறு நடத்துனர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.