சென்னையில் எந்த பகுதியிலும் 5 நிமிடத்திற்கு மேல் மழைநீர் நிற்காது - அமைச்சர் உறுதி!

சென்னையில் எந்த பகுதியிலும் 5 நிமிடத்திற்கு மேல் மழைநீர் நிற்காது - அமைச்சர் உறுதி!

சென்னையில் எந்த பகுதியிலும் 5 நிமிடத்திற்கு மேலாக மழைநீர் நிற்காது என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் உறுதியளித்துள்ளார். 

சென்னை விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கே.கே. நகர் சிவன் பூங்கா பகுதியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமசந்திரன் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மழைநீர் வடிகால் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.

இதையும் படிக்க : பீகார் முதலமைச்சரின் திருவாரூர் பயணம் ரத்து...காரணம் இதுதான்!

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன்,  சென்ற ஆண்டு பருவமழையின்போது, படகுகளில் மக்களை பாதுகாக்கும் நிலை இருந்தது எனவும், தற்போது இந்த பகுதியில் முழுவதுமாக மழை நீர் தேங்காத வண்ணம் பணிகள் நடைபெற்றது எனவும் தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல், சென்னையில் எந்த பகுதியிலும் 5 நிமிடத்திற்கு மேலாக மழைநீர் நிற்காது என உறுதியளித்தார்.

தொடர்ந்து, சென்னை புறநகர் பகுதிகளில் எப்போது வடிகால் பணிகள் நிறைவடையும் என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் மா.சுப்ரமணியன், சென்னையில் தற்போது மழைக்காலங்களில் மழைநீர் தேங்காத வண்ணம் எப்படி இருக்கிறது. அதேபோல், சென்னையின் புறநகர் பகுதிகளிலும் 100% பணி நிறைவடைந்த பின் இன்னும் ஆறு மாத காலங்களில் இதுபோன்ற நிலை வரும் என்று தெரிவித்தார்.