திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு : ஜனவரி 22 வரை திறந்திருக்கும் !!

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் சொர்க்க வாசல், இன்று அதிகாலை நான்கரை மணிக்கு பக்தர்கள் இன்றி திறக்கப்பட்டது. 

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு : ஜனவரி 22 வரை திறந்திருக்கும் !!

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா நடைபெற்று வருகிறது. வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான சொர்க்க வாசல் இன்று அதிகாலை நான்கரை மணிக்கு திறக்கப்பட்டது.  முன்னதாக உள்பிரகார புறப்பாடு நடைபெற்றது. சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தனது குடும்பத்துடன் தரிசனம் மேற்கொண்டார்.

பின்னர் மணி 6 முதல் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று இரவு 8 மணி வரை பார்த்தசாரதி கோவிலில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும், நாளை முதல் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலை தவிர்த்து, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் இன்று சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. இன்று முதல் வரும் 22 ஆம் தேதி வரை சொர்க்க வாசல் திறக்கப்பட்டிருக்கும்.