இனிதே முடிந்தது ஜி-20 மாநாடு...! சிற்பங்களை கண்டுரசித்த மாநாட்டு விருந்தினர்கள்...!

இனிதே முடிந்தது ஜி-20 மாநாடு...!  சிற்பங்களை கண்டுரசித்த மாநாட்டு விருந்தினர்கள்...!

உலக சுற்றுலாத்தலமான மாமல்லபுரத்தில் நடைபெறும் நிலையான நிதி செயற்குழுவின் ஜி20. மாநாட்டு விருந்தினர்கள் இன்று   புராதான சின்னங்களை கண்டு ரசித்தனர்.  வெளிநாட்டு விருந்தினர்களுக்கு சுற்றுலாத்துறை சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

 
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில்   ஜி20 நிலையான நிதி செயற்குழுவின் மாநாடு 3 நாட்கள் நடைபெற்று முடிந்தது. இந்த மாநாட்டில் பிரான்ஸ், ஜெர்மன், இத்தாலி, இங்கிலாந்து இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, தென் கொரியா வடகொரியா, அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, நார்வே, டென்மார்க் உள்ளிட்ட 18 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் 150 பேர் பங்கேற்றனர்.

இந்த மாநாட்டில் பங்கேற்ற வெளிநாட்டு விருந்தினர்கள் மாமல்லபுரத்தில் உள்ள பல்லவ மன்னர்களின் கலைச் சின்னங்களான கடற்கரை கோயில், ஐந்துரதம், அர்ச்சுனன் தபசு உள்ளிட்ட புராதன சின்னங்களை கண்டு ரசிக்க, தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

இன்று முதலாவதாக ஐந்து ரதம், அர்ஜுனன் தபசு இறுதியாக கடற்கரை கோயில் பகுதியை சுற்றி பார்த்துவிட்டு  கண்டுரசித்தனர் அவர்களுக்கு சுற்றுலாத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சுற்றுலா வழிகாட்டிகள் பாரம்பரிய உடைகளான வேட்டி  அணிந்து கலைச்  சின்னங்களின் வரலாற்று சிறப்புகளை எடுத்துக் கூறினர், வெளிநாட்டு விருந்தினர்கள் கலை சின்னங்கள் முன்னால் நின்று புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்தனர்.

முன்னதாக வெளிநாட்டு விருந்தினர்களின் பாதுகாப்பை கருதி மோப்ப நாய்கள் மூலம் பாதுகாப்பை உறுதி செய்த பின்னர் சுற்றுலா பயணிகள் யாரையும் அனுமதிக்காமல் விருந்தினர்களை மட்டுமே அனுமதித்தனர். அவர்கள் சுற்றிபார்த்தபிறகு சுற்றுலா பயணிகளை அனுமதித்தனர்.

இந்நிகழ்ச்சியில், ஜி 20. மாநாட்டு விருந்தினர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் சுற்றுலாத்துறை, மற்றும் காவல் துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

இதையும் படிக்க    | பாஜகவுக்கு எதிரான எதிர்கட்சிகள் கூட்டம் : புறக்கணிக்குமா ஆம்ஆத்மி?