வந்தேறிகள்.... நோட்டீஸ் அனுப்பிய தேர்தல் ஆணையம்!!

வந்தேறிகள்.... நோட்டீஸ் அனுப்பிய தேர்தல் ஆணையம்!!

அருந்ததியர் மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் 24 மணி நேரத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

வந்தேறிகள்:

ஈரோடு இடைத்தேர்தல் காரணமாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த 13ம் தேதி மாலை திருநகர் காலனி பகுதியில் வேட்பாளர் மேனகா நவநீதனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.  அப்போது பேசிய சீமான், ஈரோட்டில் வாழும் அருந்ததியின மக்கள் தூய்மை பணிக்காக விஜயநகர பேரரசு காலத்தில் ஆந்திராவில் இருந்து வரவழைக்கப்பட்டவர்கள் எனப் பேசியிருந்தார்.

மேலும் தெரிந்துகொள்க:  வாக்கு சேகரிக்க சென்ற இடத்தில் வந்தேறிகள் என வம்பு இழுத்த சீமான்..!!!

சீர்குலையும் நல்லிணக்கம்:

அடிப்படை ஆதாரமற்ற முறையில் அருந்ததியின மக்கள் குறித்து பொய் பிரச்சாரம் மேற்கொண்டதால், சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதனை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் இது சமூக நல்லிணக்கத்தை சீர்குலைப்பதாக இருப்பதாகவும் அணைத்திந்திய அருந்ததியர் மக்களின் சார்பாகவும், சமூக நீதி மக்கள் கட்சி சார்பாகவும் தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. 

நவநீதனுக்கு நோட்டீஸ்:

இதனால், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 பிரிவு 123(4) படியும்,பொதுமக்களிடையே வெறுப்பை தூண்டுதல் பிரிவு 125 படியும் தேர்தல் விதிமுறைகளை மீறியதின் அடிப்படையிலும் வந்த புகார் குறித்து 24 மணி நேரத்தில் விளக்கமளிக்க வேண்டும் எனவும், விளக்கமளிக்க தவறினால், வேட்பாளர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தேர்தல் ஆணையமானது நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதனுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதையும் படிக்க:   மேம்படுத்தப்பட்டு வரும் அரசு மருத்துவமனைகள்...... மக்கள் நாடும் இடமாக மாறி வருகிறதா?!!