தொழிலாளர்கள் உரிமையை முதலமைச்சர் பேணி காப்பார்...! தொமுச பொது செயலாளர்...!!

தொழிலாளர்கள் உரிமையை முதலமைச்சர் பேணி காப்பார்...! தொமுச பொது செயலாளர்...!!

தொழிலாளர்கள் உரிமையை அவர் பேணி காப்பார் என்று நம்புகிறோம் என திமுக தொழிற்சங்கமான தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் பொதுசெயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு தொழிற்சாலைகள் சட்டத்திருத்தம் திரும்ப பெறப்பட்டது என முதல்வர் அறிவித்துள்ள நிலையில் தொமுச பொது செயலாளர் சண்முகம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "தமிழக சட்டபேரவையில் தொழிலாளர் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து பணி நேரத்தை 8 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரமாக நீட்டிப்பதாக தெரிவித்து இருந்தார்கள். அந்த சட்டத்தில் புரிதல் இல்லாத காரணத்தினால் இது குறித்த உடனடியாக முதலமைச்சரிடம் பேசினோம். இந்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்று தெரிவித்திருந்தோம்.

அதனை ஏற்று இச்சட்டம் குறித்து, தமிழக முதலமைச்சர் அனைத்து தொழிற்சங்கங்களையும் அழைத்து பேசிய போது இந்த சட்டம் வேண்டாம் என்றும் தெரிவித்து இருந்தோம். உடனடியாக முதல்வர், அந்த சட்டத்தை திரும்ப பெற்று இருக்கிறார் என்றால் அவரிடம் உள்ள தொழிலாளர் உணர்வு, தொழிலாளர்கள் உரிமையை அவர் பேணி காப்பார் என்று நம்புகிறோம்" என தெரிவித்தார். மேலும், தமிழக முதல்வருக்கு நன்றி மற்றும் இந்த அறிவிப்பினை வரவேற்கிறோம் என தெரிவித்தார்.

இதையும் படிக்க:12 மணி நேர வேலை சட்டமசோதா...! திரும்ப பெற்றதாக முதலமைச்சர் அறிவிப்பு...!!