விரைவில் குடும்ப தலைவிகளுக்கு 1000 ரூபாய்...முதலமைச்சர் உறுதி!

விரைவில் குடும்ப தலைவிகளுக்கு 1000 ரூபாய்...முதலமைச்சர் உறுதி!

நிதிநிலை சரியானதும் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் திட்டம் தொடங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

திருமண விழாவில் ஸ்டாலின்:

கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெற்ற முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி இல்லத் திருமண விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், முதலில் மணமக்களை வாழ்த்தி பேசினார். தொடர்ந்து பேசிய அவர், தேர்தலின் போது திமுக அளித்த வாக்குறுதிகளில் 70 சதவீதம் நிறைவேற்றிவிட்டோம்; மீதமுள்ள 30 சதவீதத்தை விரைவில் நிறைவேற்றுவோம் என உறுதி அளித்தார்.

மேலும் படிக்க: எடப்பாடியை மறைமுகமாக மிரட்டுகிறாரா ஸ்டாலின்?

வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன:

தொடர்ந்து பேசிய அவர், திமுக தேர்தலின் போது கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை என எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டி வருகின்றார். ஆனால், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பெண்களுக்கு இலவச பேருந்து, பால்விலை குறைப்பு, பெட்ரோல் விலை குறைப்பு போன்ற பல  வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளது என தெரிவித்தார், அதேபோன்று, அரசு பள்ளிகளில் படித்த மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் டெல்லி முதல்வர் தலைமையில் துவங்கப்பட இருக்கின்றது எனவும் கூறினார்.

நிதிநிலை சரியானதும் 1000 ரூபாய்:

அதைத்தொடர்ந்து, நிதிநிலை சரியானதும் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் உரிமை தொகை விரைவில் வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் தெரிவித்தார்.