காங்கிரஸ் தலைவர்கள் படங்களை தீயிட்டு கொளுத்திய பா.ஜ.க.வினர் : கைது செய்ய கோரி காங்கிரசார் ஆர்ப்பாட்டம்!!

கோவில்பட்டியில் சோனியா,ராகுல்காந்தி, பஞ்சாப் முதல்வர் திருவுருவப்படங்களை தீயிட்டு கொளுத்தி பா.ஜ.கவினரை கைது செய்ய வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

காங்கிரஸ் தலைவர்கள் படங்களை தீயிட்டு கொளுத்திய பா.ஜ.க.வினர் : கைது செய்ய கோரி காங்கிரசார் ஆர்ப்பாட்டம்!!

பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி சென்று போது பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாக கூறி அவரது நிகழ்சி ரத்து செய்யப்பட்டது. இப்பிரச்சினை நாடுமுழுவதும் பெரும் பரபரப்பினை ஏற்படுத்திய நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பஞ்சாப் சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு பஞ்சாப் மாநில அரசு  சரியான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யவில்லை என்று கூறி, பஞ்சாப் மாநில முதல்வர் சரண்ஜித்சிங் சன்னி, காங்கிரஸ் கட்சி பொறுப்பு தலைவர் சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை கண்டித்து பயணியர் விடுதி முன்பு பாரதிய ஜனதா கட்சியினர் அக்கட்சியின் வடக்கு மாவட்ட தலைவர் ராமமூர்த்தி தலைமையில் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தின் முடிவில் பஞ்சாப் முதல்வர் சரண்ஜித்சிங் சன்னி, சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் படங்களை எரித்து பாரதிய ஜனதா கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையெடுத்து போலீசார் தீயை அணைத்து அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். 

பஞ்சாப் முதல்வர் சரண்ஜித்சிங் சன்னி, சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் படங்களை பா.ஜ.கவினர் தீ எரித்து போராட்டத்தில் ஈடுபட்ட தகவல் கிடைத்தும் காங்கிரஸ் கட்சியினர் அதன் வடக்கு மாவட்ட தலைவர் காமராஜ், நகர தலைவர் அருண் பாண்டியன் ஆகியோர் தலைமையில் பா.ஜ.கவினரை கண்டித்தும், படங்களை எரித்தவர்களை கைது செய்ய வலியுறுத்தியும் திடீரென பயணியர் விடுதி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையெடுத்து போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர். பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் கட்சியினர் அடுத்தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.