ஒரே தேசம் ஒரே கல்வி திட்டத்தை கொண்டு வர பாஜக முயற்சி...திருமாவளவன் குற்றச்சாட்டு !

பாஜக அரசு தேசிய கல்வி கொள்கை என்னும் முறையில் ஒரே தேசம், ஒரே கல்வி என்னும் திட்டத்தை கொண்டு வர முயற்சிப்பதாக திருமாவளவன் குற்றம் சாட்டினார்

ஒரே தேசம் ஒரே கல்வி திட்டத்தை கொண்டு வர பாஜக முயற்சி...திருமாவளவன் குற்றச்சாட்டு  !

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிக்கையாளர் சங்கத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் பேராசிரியர் கருணானந்தன் எழுதிய தமிழர் வரலாற்றை அழிக்கும் பாஜகவின் கல்வித் திட்டம் என்ற நூலை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன்  வெளியிட்டார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், 

பாஜக அரசு புதிய கல்வி கொள்கை என்கின்ற பெயரில் ஒரே தேசம் ஒரே கல்வி எனும் திட்டத்தை கொண்டுவர முயற்சிக்கிறது என்றும் ஒற்றை கலாச்சரத்தை கொண்டு வர கல்வியில் இருந்தும் பிஞ்சு குழந்தைகளில் இருந்து தொடங்க வேண்டும் என்ற தொலைநோக்கு பார்வையுடன் செயல்படுகிறார்கள் என குற்றம் சாட்டினார்.