பாஜக அரசு மாநில அரசின் குரல்வளையை நெரிக்கிறது ...!

பாஜக அரசு மாநில அரசின் குரல்வளையை  நெரிக்கிறது ...!


பா.ஜ.க அரசு மக்களுக்கு வரும் நலத்திட்டங்களை முடக்குவதுடன் மாநில அரசின் குரல்வளையை நெருக்குகிறது என முன்னாள் மத்திய இனை அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் கருத்து தெரிவித்துள்ளார். .

ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து இன்று நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக சிவகங்கை ரயில் நிலையத்தின் முன்பு மாவட்ட காங்கிரஸ் சார்பில் அதன் மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. 

இதில் முன்னாள் மத்திய இனை அமைச்சர் ஈ.எம்.சுதர்சன நாச்சியப்பன், முன்னாள் சட்டமன்ற குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினர் அவர்களை ரயில் நிலையம் உள்ளே செல்ல அனுமதி மறுத்ததால் காவல்துறையினருக்கும் கட்சியினருக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 

இதையும் படிக்க | என்னிடம் உங்கள் உருட்டலும் மிரட்டலும் வேலைக்காகாது... திமுகவுக்கு சவால் விட்ட அண்ணாமலை!!

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் இனை அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் அதானி மற்றும் மோடி விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியதன் காரணமாக 3 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட வழக்கை எடுத்து அவசர அவசரமாக தீர்ப்பு வழங்கி நாடாளுமன்றத்திலிருந்து தகுதி நீக்கம் செய்துள்ளனர். 

இது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும் அதனைக்  கண்டித்து 20 எதிர் கட்சிகள் ஒன்றினைந்து நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகிறோம் என்றும் தெரிவித்தார். மத்திய பா.ஜ.க அரசு மக்களுக்கான நலத்திட்டங்களை முடக்குவதுடன் மாநில கட்சிகளின் குரல்வளையை நெரிக்கிறது என்றும் ராகுல் காந்தி மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக ஏற்கப்படும் வரை தொடர் போராட்டங்களை நடத்துவோம் என்றும் பேட்டியளித்தார்.

இதையும் படிக்க | காங்கிரஸாரின் தொடர் போராட்டத்தால் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பு...!