”திமுக ஆட்சியில் நடவடிக்கை எடுக்கிறோம்; ஆனால், அதிமுகவில் எடுக்கவில்லை” இபிஎஸ்-க்கு அமைச்சர் பதிலடி!

”திமுக ஆட்சியில் நடவடிக்கை எடுக்கிறோம்; ஆனால், அதிமுகவில் எடுக்கவில்லை” இபிஎஸ்-க்கு அமைச்சர் பதிலடி!

அதிமுக ஆட்சியில் விஷச்சாராயம் காய்ச்சுவோர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று ஈபிஎஸ் கருத்துக்கு அமைச்சர் செஞ்சி மஸ்தான் பதிலடி கொடுத்துள்ளார்.

முன்னதாக நேற்றைய தினம், கள்ளச்சாராய விவகாரத்தில் அமைச்சர் செஞ்சி மஸ்தானை பதிவியிலிருந்து நீக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டிருந்தார். 

இதையும் படிக்க : ”பிரதமா் மோடி பதவி விலக வேண்டும்” - ஈவிகேஎஸ் கண்டனம்!

இந்நிலையில் இன்று சென்னை விமான நிலையம் சென்ற சிறுபான்மை நலத்துறை மற்றும் வெளிநாடு வாழ் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், ஹஜ் பயணம் மேற்கொள்ளும் இஸ்லாமியர்களை வழி அனுப்பி வைத்தார்.

அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், தான் பதவி விலக வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையை சுட்டிக்காட்டி, திமுக அரசு விஷச்சாராயம் காய்ச்சுவோர் மீது நடவடிக்கை எடுப்பதால்தான் வெளியில் தெரிவதாகவும், ஆனால் அதிமுக ஆட்சியில் விஷச்சாராயம் காய்ச்சுவோர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.