வரும் 22ஆம் தேதி காவிரி மேலாண்மை கூட்டம்.. 4 மாநிலங்களுக்கு அழைப்பு!!

காவிரி மேலாண்மை ஆணையத்தின் 16வது கூட்டம் வருகிற 22ம் தேதி நடைபெறும் என ஆணைய தலைவர் ஹல்தர் அறிவித்துள்ளார்.

வரும் 22ஆம் தேதி காவிரி மேலாண்மை கூட்டம்.. 4 மாநிலங்களுக்கு அழைப்பு!!

மேகதாது அணை கட்டுவது குறித்து கடிதம்:

மேகதாது அணை கட்டுவது குறித்து காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தில் விவாதிக்க வேண்டும் என கர்நாடகா அரசு ஜூன் மாதம் கடிதம் அனுப்பியது.

இதற்கு ஆணையமும் அனுமதி வழங்கிய நிலையில் இத்தகைய நிலைப்பாடு உச்சநீதிமன்ற முந்தைய உத்தரவுகளுக்கு எதிரானது என ஜூன் 7-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு முறையீடு செய்தது. இதையடுத்து ஜூன் 17ம் தேதி நடைபெற இருந்த காவிரி ஆணையத்தின் கூட்டம் அடுத்தடுத்து 3 முறை ஒத்திவைக்கப்பட்டது.

விவாத கூட்டத்திற்கு அழைப்பு விடுப்பு:

இந்த நிலையில் இக்கூட்டம் வருகிற 22ம் தேதி நடைபெறும் எனவும், இதில்  தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுவை ஆகிய 4 மாநில உறுப்பினர்கள் கலந்துகொள்ளுமாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல்:

இதற்கிடையே காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை விவகாரம் குறித்து விவாதிக்க கூடாது என்பது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மனு வருகிற 20-ந் தேதி விசாரணைக்காக பட்டியலிடப்பட்டுள்ளது.