11 பேரை பலிவாங்கிய சப்பரம் விபத்துக்கு அரசு அதிகாரிகள் காவல் துறையினரின் மெத்தன போக்கே காரணம் - பிரேமலதா குற்றச்சாட்டு!

11 பேரை பலிவாங்கிய தஞ்சாவூர் சப்பரம் விபத்திற்கு அரசு அதிகாரிகள் காவல் துறையினரின் மெத்தன போக்கே காரணம் என  தேமுதிக பொருளாளர் பிரேமலதா குற்றம் சாட்டியுள்ளார்.

11 பேரை பலிவாங்கிய சப்பரம் விபத்துக்கு அரசு அதிகாரிகள் காவல் துறையினரின் மெத்தன போக்கே காரணம் -  பிரேமலதா குற்றச்சாட்டு!

தஞ்சை அடுத்த களிமேட்டில் நடைபெற்ற சப்பரம் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 10 ஆயிரம் நிவாரணம் வழங்கினார்.

பின்னர் பேட்டி அளித்த அவர், திருவிழா நடத்துவதற்கு முறையாக அனுமதி வாங்கவில்லை என அதிகாரிகள் கூறுவது தவறு என்றார். அரசு அதிகாரிகள்  மற்றும் காவல் துறையினரின் மெத்தன போக்கே 11  பேர் பலியானதற்கு  காரணம்  என்றும் இதில் தொடர்புடைய அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.