இளங்கோவனுக்கு சொந்தமான இடங்களில் சோதனை... மொத்தம் 36 இடங்களில் நடத்தப்பட்ட சோதனை நிறைவு...

தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவனின் வீடு உள்ளிட்ட 36 இடங்களில் நடைபெற்று வந்த லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நிறைவு பெற்றது.

இளங்கோவனுக்கு சொந்தமான இடங்களில் சோதனை... மொத்தம் 36 இடங்களில் நடத்தப்பட்ட சோதனை நிறைவு...

சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த புத்திரகவுண்டம்பாளையத்தைச் சேர்ந்தவர் இளங்கோவன்.  தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவரான, இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக எழுந்த புகாரை தொடர்ந்து, இளங்கோவன் மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை மேற்கொண்டனர். சேலத்தில் மட்டுமே இளங்கோவன் மற்றும் அவரது மகன் பிரவீன்குமாருக்கு சொந்தமான மொத்தம் 36 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். 

இந்நிலையில் 3 கோடியே 78 லட்சத்து 31 ஆயிரத்து 755 மதிப்புள்ள சொத்துகள் வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. வருமானத்துக்கு அதிகமாக 131 சதவீதம் சொத்துகளை சொத்து சேர்த்துள்ளதாக இளங்கோவன் மற்றும் அவரது மகன் பிரவீன்குமார் ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

சோதனையில் 29.77 லட்சம் பணம், 10 சொகுசு கார்கள்,  இரண்டு பேருந்துகள், 3 கணினி ஹார்டிஸ்கள், 21.2 கிலோ தங்க நகைகள், 282 கிலோ வெள்ளிப் பொருட்கள், வங்கி கணக்கு புத்தகங்கள் மற்றும் வங்கி வைப்புதொகை 68 லட்சம் ரூபாயை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். 

இதனிடையே நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த மங்களபுரத்தில் உள்ள பிரன்வீன்குமாருக்கு சொந்தமான நகை கடையில் ஐந்து பேர் கொண்ட குழுவினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.