சென்னையில் 5,000 சாலைகள் அமைக்க டெண்டர் - அமைச்சர் கே.என்.நேரு அறிவிப்பு.

சென்னையில் 5,000 சாலைகள் அமைக்க டெண்டர் -  அமைச்சர் கே.என்.நேரு  அறிவிப்பு.

சென்னை மாநகரத்தில் 5 ஆயிரம் சாலைகள் அமைக்க டெண்டர் விடப்பட்டுள்ளதாக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். 

மழைக் காலங்களில் மதுரவாயலில் இருந்து நொளம்பூர் செல்வதற்கு கூவம் இடையே உள்ள தரைப்பாலத்தை பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர் கடந்த மழை காலங்களின்போது அதிக அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் தரைப்பாலம் மூழ்கடித்து விட்டு வெள்ள நீர் சென்றது.  இதில் சிலர் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தனர். இதனை போக்கும் வகையில் இந்த பகுதிகளில் இரண்டு உயர் மட்ட மேம்பாலங்கள் அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், உள் கட்டமைப்பு மற்றும் வசதிகள் நிதியின் கீழ் வளசரவாக்கம் மண்டலத்திற்கு உட்பட்ட கூவம் ஆற்றின் குறுக்கே பூந்தமல்லி நெடுஞ்சாலை மற்றும் யூனியன் சாலை இணைக்கும் வகையில் சின்ன நொளம்பூரில் ரூ.42.71 மதிப்பீட்டிலும் சன்னதி முதல் குறுக்கு தெருவில் ரூ.31.65 கோடி மதிப்பீட்டின் 2 உயர் மட்ட பாலங்கள் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை விழா மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் கணபதி தலைமையில் நடைபெற்றது.

இதில் அமைச்சர்கள் கே.என். நேரு, மா.சுப்ரமணியன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பாலம் அமைக்கும் பணிக்கான பூமி பூஜையை தொடங்கி வைத்தனர்.

இது குறித்து அமைச்சர் கே.என் நேரு அளித்த பேட்டியில் கூறியதாவது :

மணப்பாக்கம், முகலிவாக்கம் போன்ற இடங்களில் குடி நீர் குழாய் மற்றும் பாதாள சாக்கடை பனி நடந்து வருகிறது. மழை காலம் வருவதால் பல்வேறு இடங்களில் சாலையை சரி செய்ய கூறி விட்டோம். சென்னை மாநகரத்தில் 5 ஆயிரம் சாலைகள் அமைக்க டெண்டர் விடப்பட்டுள்ளது.  சாலைகள் போடப்படும் எனவும் சாலைகள் அமைத்து முடித்த பிறகு தடையில்லா சான்று வழங்காமல் இருப்பதெல்லாம் ஒன்றுமில்லை”,  என தெரிவித்தார்.

இதையும் படிக்க   | சாலையில் ஆறாய் ஓடும் கழிவுநீர்: அதிகாரிகளின் அலட்சியத்தால் மக்கள் கடும் அவதி.