கோயில் நிலத்தை வேறொருவர் பெயருக்கு எழுதி வைக்க முடியாது...உயர்நீதிமன்றம் உத்தரவு!

கோயில் நிலத்தை  வேறொருவர் பெயருக்கு எழுதி வைக்க முடியாது...உயர்நீதிமன்றம் உத்தரவு!

கோயிலில் சேவை செய்வதற்காக வழங்கப்பட்ட நிலத்தை வேறொருவர் பெயருக்கு எழுதி வைக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

மதுரை அழகர் கோயிலுக்கு சொந்தமான 1.83 ஏக்கர் நிலம் அக்கோயிலின் பட்டராக இருந்த லக்‌ஷ்மணா என்பவருக்கு வழங்கப்பட்டது. ஆனால், இவர் அந்த நிலத்தை வேறொரு நபர்கள் பெயருக்கு எழுதி வைத்தார். 

இதையும் படிக்க : 12 வது அமைச்சரவை கூட்டம்...திட்டங்களை செயல்படுத்துவது குறித்து அறிவுறுத்தல்...!

இதனை எதிர்த்து கோயில் நிர்வாகம் சார்பில், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், கோயிலில் சேவை செய்வதற்காக வழங்கப்பட்ட நிலத்தை வேறொருவர் பெயருக்கு எழுதி வைக்க முடியாது என கூறி மாவட்ட ஆட்சியரின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.