பள்ளிக்கு இவர்கள் கட்டாயம் வரவேண்டும்: தமிழக அரசு உத்தரவு!  

மாணவர்களை தேர்வுக்கு தயார் படுத்தும் விதமாக அனைத்து ஆசிரியர்களும் பள்ளிகளுக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.  

பள்ளிக்கு இவர்கள் கட்டாயம் வரவேண்டும்:  தமிழக அரசு உத்தரவு!   

மாணவர்களை தேர்வுக்கு தயார் படுத்தும் விதமாக அனைத்து ஆசிரியர்களும் பள்ளிகளுக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பரவல் அச்சம் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஆசிரியர்கள் சுழற்சி முறையில் வரவழைக்கப்பட்டனர். மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடத்தப்பட்டு வருவதால் வீட்டிலிருந்தபடியே கல்வி பணிகளை மேற்கொள்ள அரசு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் அடுத்த கல்வி ஆண்டு துவங்கியுள்ளதால் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களை முதற்கட்டமாக பள்ளிகளுக்கு வர வைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கேற்ற வகையில் வகுப்பறைகளை தயார்செய்து பாடங்களை நடத்துவதற்கு ஏதுவாக அனைத்து ஆசிரியர்களும் இன்று முதல் பள்ளிக்கு வர உத்தரவிடப்பட்டிருந்தது.

அதன்படி சுமார் 4 மாதங்களுக்கு பிறகு அனைத்து ஆசிரியர்களும் மீண்டும் பள்ளிகளுக்கு திரும்பியுள்ளனர். முதற்கட்டமாக வரும் 6ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலம் அலகு தேர்வுகள் நடத்தவும், அதனை தொடர்ந்து பள்ளிகள் திறக்கப்பட்டால் மாணவர்களை வரவேற்று அவர்களுக்கு பாடங்களை நடத்துவதற்கு முன் தயாரிப்பு பணிகளில் ஈடுபடவும் தலைமையாசிரியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.