"வரி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது” வருமான வரித்துறை ஆணையர் ரவிச்சந்திரன் ...!..

"வரி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது” வருமான வரித்துறை  ஆணையர் ரவிச்சந்திரன் ...!..

திருவள்ளுவர் தமிழர்களின் பொக்கிஷம்.....

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் திருவள்ளுவர் சிலை திறப்பு விழா நடைப்பெற்றது.  இதனை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் வருமான வரித்துறை முதன்மை தலைமை ஆணையர் ரவிசந்திரன் ராமசாமி திறந்து வைத்தார்.
அங்கு அவர்  செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், 'வாழ்வில் எப்படி வாழ வேண்டும் என்று நமக்குக்  கற்று கொடுத்த திருவள்ளுவர் தமிழர்களின் பொக்கிஷம் என்றார்.

ஆண்டு தோறும் பத்து சதவிகிதம் அதிகரித்துவருகிறது...

தமிழகத்தில்  வருமான வரி செலுத்தியவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு அதிகரித்துள்ளதாகவும், மேலும், வருமான வரி செலுத்துபவர்கள் எண்ணிக்கை குறிப்பில் இலக்காக இந்த ஆண்டு 1 லட்சத்து 8 ஆயிரத்து 200 கோடியாக எதிர்பார்த்திருந்த  நிலையில், 1 லட்சத்து 8 ஆயிரத்து 500 கோடியாக அதிகரித்துள்ளதாக முடிவு வந்திருக்கிறது. தமிழகத்தில் வருமான வரி செலுத்துவர்களின் எண்ணிக்கை ஆண்டு தோறும் பத்து சதவிகிதம் அதிகரித்துவருகிறது எனவும் குறிப்பிட்டார்.

வரி ஏய்ப்பு செய்யாமல் அனைவரும் முறையாக வரி செலுத்த வேண்டும்...

பான் கார்டுடன் ஆதார் அட்டையை  அனைவரும் இணைத்து வருகின்றனர், இருப்பினும் இணைப்பதில்  ஒரு சில பிரச்சனைகள் இருப்பதன் காரணமாக கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. வரி ஏய்ப்பு செய்யாமல் அனைவரும் முறையாக வரி செலுத்த வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.  ஆதார் வழியாக வங்கியின் தகவல் கிடைப்பதால் அதன் மூலம் வங்கியின் மூலம் நடைபெறும் பணபரிமாற்ற தகவல்கள் கிடைக்கும்எனவும்  கூறினார். 


 இதையும் படிக்க;... "படித்ததை பகிர்ந்துகொள்கிறேன்.". - சரத்குமார் ...-https://www.malaimurasu.com/I-share-what-I-enjoyed-actor-sarath-kumar-offers-his-books-to-people-free