இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் மகுடம் சூடிய தமிழர்கள்..!

இந்திய விண்வெளி ஆராய்ச்சியில்  மகுடம் சூடிய தமிழர்கள்..!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் மகுடம் சூடிய அப்துல் கலாம், சிவதாணு பிள்ளை, மயில்சாமி அண்ணாதுரை, சிவன், வனிதா முத்தையா ஆகிய தமிழர்களின் வரிசையில் தற்போது, அறிவியல் வல்லுநர் வீரமுத்துவேல் தடம் பதித்துள்ளார்.

நிலவு குறித்து ஆய்வு செய்வதற்காக சந்திராயன் 3 விண்கலம் சதீஷ்தவான் ஆய்வு மையத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இந்த விண்வெளி ஆராய்ச்சியில் தமிழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் தொடர்ந்து சாதனைகள் படைத்து வருகின்றனர்.

இதில், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், சிவதாணுப் பிள்ளை, மயில்சாமி அண்ணாதுரை, சிவன், ஆகியோர் வரிசையில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த விஞ்ஞானியான வீர முத்துவேல், சந்திரயான் - 3 விண்கலம் உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றி உள்ளார். சந்திரயான் -1 மற்றும் 2  திட்டங்களை தொடர்ந்து சந்திரயான் - 3 திட்டத்திலும் வீர முத்துவேல் முத்திரை பதித்துள்ளார். 

தாம்பரம் தனியார் கல்லூரியில் பொறியியல் படிப்பு முடிந்த இவர், முதல் நிலை ஆராய்ச்சி படிப்பை ஐஐடியில் நிறைவு செய்துள்ளார். சென்னை ஐஐடியின் ஏரோ ஸ்பேஸ் துறையில் ஆராய்ச்சிகளை மேற்கொண்ட வீர முத்துவேலுக்கு, 1989-ல் இஸ்ரோவின் விஞ்ஞானியாகும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது, விண்கலத்தின் எலக்ட்ரானிக் தொகுப்பில் அதிர்வுகளை கட்டுப்படுத்துவது குறித்து, கடந்த 2016 ஆம் ஆண்டு இவர் சமர்ப்பித்த கட்டுரை இஸ்ரோ விஞ்ஞானிகள் இடையே பிரபலமாக பேசப்பட்டது. 

ஏனெனில், இவர் கண்டறிந்த தொழில்நுட்பம், நிலவில் லேண்டரை தரை இறக்குவதற்கும், ரோவரை இயக்குவதற்கும் உதவிகரமாக இருக்கும் என கூறப்படுகிறது.  மெய் நிகர் தொழில்நுட்பம், மென்பொருள் வன்பொருள் குறித்தான அனைத்து துறைகளிலும் ஈடுபாடும் ஆர்வமும் கொண்ட வீர முத்துவேல், கடந்த 2019 ஆம் வருடம் சந்திரயான் 3 திட்டத்தின் இயக்குனராக நியமிக்கப்பட்டார். 

இந்நிலையில், சந்திரயான் 3 விண்கலம் துல்லியமான சுற்றுப்பாதையில் நிலவை நோக்கி பயணம் செய்து வருவதாக சந்திரயான் 3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளார்.  

இதையும்  படிக்க   | வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது சந்திரயான் -3 விண்கலம்..!