தமிழ்நாட்டு வீரர்கள் உலகெங்கும் செல்ல வேண்டும்; வெல்ல வேண்டும் - முதலமைச்சர் வாழ்த்து செய்தி!

தமிழ்நாட்டு வீரர்கள் உலகெங்கும் செல்ல வேண்டும்; வெல்ல வேண்டும் - முதலமைச்சர் வாழ்த்து செய்தி!

தமிழ்நாட்டை சேர்ந்த ஜெஸ்வின் அல்ட்ரின் பாரிஸ் ஒலிம்பிக்கில் உலக சாதனை படைத்து தங்கம் வெல்ல வாழ்த்துவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பாரிஸ் ஒலிம்பிக்கில் தமிழ்நாட்டை சேர்ந்த ஜெஸ்வின் அல்ட்ரின் உலக சாதனை படைத்து தங்கம் வெல்ல வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார்.

இதையும் படிக்க : அளவுக்கு அதிகமான சத்து மாத்திரை...உயிரை விட்ட மாணவி...உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அமைச்சர் பேட்டி!

அதில் பெல்லாரி இந்தியன் ஓபன் ஜம்ப்ஸ் போட்டியில் 8 புள்ளி நான்கு இரண்டு மீட்டர் தாண்டி தேசிய சாதனை படைத்துள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த ஜெஸ்வின் அல்ட்ரின், 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் உலக சாதனை படைத்து தங்கம் வென்றிட இப்போதே வாழ்த்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் தமிழ்நாட்டு வீரர்கள் உலகெங்கும் செல்ல வேண்டும்; வெல்ல வேண்டும் என்றும் முதலமைச்சர் பதிவிட்டுள்ளார்.