உக்ரைன் துணை இராணுவப்படையில் சேர்ந்த தமிழ்நாடு மாணவர்கள்? - மத்திய, மாநில உளவுத்துறையினர் விசாரணை!

உக்ரைன் துணை இராணுவப்படையில் கோவையை சேர்ந்த கல்லூரி மாணவர் இணைந்திருப்பது குறித்து மத்திய, மாநில உளவுத்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

உக்ரைன் துணை இராணுவப்படையில் சேர்ந்த தமிழ்நாடு மாணவர்கள்? - மத்திய, மாநில உளவுத்துறையினர் விசாரணை!

கோவை துடியலூர் பகுதியை சேர்ந்தவர் சாய்நிகேஷ் ரவிசந்திரன். இவர் கடந்த 2019 ஆண்டு முதல் உக்ரைனில் உள்ள கார்கோ  நேசனல் ஏரோஸ்பேஸ் பல்கலைகழகத்தில் விமானவியல் துறையில் படித்து வருகின்றார். உக்ரைன் நாட்டில் தற்போது நடைபெறும் போர் காரணமாக அந்த நாட்டில் உள்ள துணை ராணுவ பிரிவில் மாணவர் இணைந்துள்ளார்.

மேலும், அவர் உயரம் குறைவாக இருந்ததன் காரணமாக இந்திய ராணுவத்தில் சேர்க்கப்படவில்லை என்றும், தற்போது உக்ரைன் துணை இராணுவப்படையில் சாய்நிகேஷ் ரவிசந்திரன் சேர வாய்ப்பு கிடைத்துள்ளதும் இந்திய உளவு அமைப்புகளின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்திய மாணவர்கள் நாடு திரும்பி வரும் நிலையில், சாய்நிகேஷ் மட்டும் அந்த நாட்டிற்கு ஆதரவாக போர் புரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.